ஜோர்டானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இரான் மீது தாக்குதல்களை தொடங்கியது. அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழப்பது இதுவே முதல் முறை என்பதால், அமெரிக்கா தனது நடவடிக்கையில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்களே இல்லை என ஈரான், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் தாக்குதல்


ஈராக், சிரியாவில் இருந்து இந்த பதிலடித் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியது. ஈரானுடன் தொடர்புடைய இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சிரியாவில் நான்கு மற்றும் ஈராக்கில் மூன்று என ஏழு இடங்களில் இருந்து 85க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.



ஜோர்டானில் மூன்று அமெரிக்க வீரர்களின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்க ராணுவத் தாக்குதல், ஈரானின் புரட்சிகர காவலர் (Iran's Revolutionary Guard (IRGC)) மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளிகளுடன் தொடர்புடைய 85 க்கும் மேற்பட்ட இலக்குகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவம் நேற்று (2024 பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை) வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது.


அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள்


அமெரிக்காவின் தாக்குதல்கள், ஈரானுக்குள் உள்ள தளங்களை குறிவைக்கவில்லை என்றாலும், காசாவில் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுடனான இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் நிலையில் மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்துவருவதை உணர்த்துவதாக உள்ளது.


மேலும் படிக்க | எலான் மஸ்கின் அழைப்பை நிராகரித்த Mr Beast


Quds Force


IRGC இன் வெளிநாட்டு உளவு மற்றும் துணை இராணுவப் பிரிவான Quds Force மீது குறிவைத்து அமெரிக்க தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த அமைப்பு, மத்திய கிழக்கு பிராந்தியங்களீல் லெபனான், ஈராக், யேமன், சிரியா என பல போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  


ஈராக் எச்சரிக்கை


பாலைவனப் பகுதிகள் மற்றும் சிரிய-ஈராக் எல்லையில் உள்ள தளங்களில் நடைபெறும் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலால், சேதங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கும் ஈராக், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கும் என்று கருதுகிறது. இது தொடர்பான செய்திகள், சிரியாவின் அரசு ஊடகங்களில் நேற்று வெளியானது.


ஆனால், உயிர்சேதம் மற்றும் பாதிப்புக் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஈராக் எல்லைப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக கூறிய ஈராக் ராணுவம், இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியில் ஸ்திரமற்ற தன்மையை தூண்டும் எனவும் எச்சரித்துள்ளது.


இதற்கிடையில், ஈரான் தன்னை நிரபராதி என்று சொன்னாலும், கடந்த சில மாதங்களில் ஈரான், சுமார் 160 தாக்குதல்களை நடத்தியிருப்பதாக  ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின்படி, ஈரானின் பினாமி போராளிகளால் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு ஹெஸ்பொல்லாவால் அனுப்பப்பட்ட ஏவுகணைகள் மற்றும் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஏமனில் இருந்து ஹூதிகளால் ஏவப்பட்ட ஷெல் தாக்குதல்களும் இவற்றில் அடங்கும்.


ஈரான் நடத்தும் தாக்குதல்களினால், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் சீண்டப்பட்டால் நிலைமை தீவிரமடையும் என்பதைத் தெரிந்தே ஈரான் இந்த தாக்குதல்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | World War III: மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டது! அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ