மாஸ்கோ: உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் பேச்சு வார்த்தையில் எந்த வித பயனும் ஏற்படாத நிலையில்,  உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில்,  இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு கிளம்ப சொல்லி மீட்டுகொண்டிருப்பதால் உக்ரைன் யுத்தம் தவிர்க்கபட முடியாதது போன்ற  தோற்றம் நிலவுகின்றது. இங்கிலாந்து உள்ளிட்ட இதர நாடுகளும், தங்கள் குடிமக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. 


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!


முன்னதாக, உக்ரைனில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்தார். படையெடுப்பு நடந்தால், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக எச்சரித்தார்.  போர்  நடவடிக்கை பெருமளவிலான மக்களுக்கு துன்பத்தை உண்டாக்கும் என்றும், இதனால் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்த நிலையில், விளாடிமிர் புடின் நடவடிக்கையில் பின் வாங்குவதாக இல்லை. தனது நிலையில் மாற்றம் இல்லை என்ற வகையில் பிடிவாதமாகவே உள்ளார்


மேலும் படிக்க | உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை; ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் தொடர்கிறது எனவும் கூறினார். இந்த மாதம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று  அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. 


உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில்,  அண்டை நாடான பெலாரஸ் நாட்டிலும் பயிற்சிக்காக ராணுவ வீரர்களை ரஷ்யா அனுப்பியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு ராணுவ தளவாடங்களை ரஷ்யா சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நெதர்லாந்தை தளமாகக் கொண்ட KLM விமான நிறுவனம் உக்ரைனுக்கான அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது. உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Serhi Nikiforov, உக்ரைன் தனது வான்வெளியை மூடவில்லை என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR