புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இங்கிலாந்து ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் வேளையில், நோரோவைரஸ் என்ற புதிய வைரஸ் தீவிரமாக அங்கு பரவி வருவதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு (PHE), 'வாமிட்டிங் பக்’ காரணமாக பரவியுள்ள தொற்றின் எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளது என்று கடந்த வாரம் கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கடந்த 5 வாரங்களில், 154 பேருக்கு இந்த தொற்று பதிவாகியுள்ளது. எனினும், கடந்த ஐந்து நாடுகளில் இந்த கால அளவில் 53 பேருக்கு மட்டுமே இந்த தொற்று பரவி இருந்தது." என்று PHE தெரிவித்துள்ளது.


நாட்டின் அனைத்து வயதினருக்கும் அமைப்புகளுக்கும் இடையில் தொற்றுநோய்க்கு (Pandemic) முந்தைய நிலையில் இருந்தது போல் இந்த தொற்று பரவி வருவதாகவும் PHE கூறியது.


நோரோவைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது 


விண்டர் வாமிட்டிங் பக் என்றும் அழைக்கப்படும் நோரோவைரஸ், மிக அதிக வேகமாக பரவக்கூடியது என்று கூறிய PHE, இதனால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. "பாதிக்கப்பட்ட நபர்களுடனோ அல்லது அசுத்தமான மேற்பரப்புகளுடனோ தொடர்பு கொள்வதன் மூலம் இது எளிதில் பரவுகிறது" என்று PHE கூறியது.


ALSO READ: Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்


நோரோவைரஸின் அறிகுறிகள்


நோரோவைரஸின் அறிகுறிகளில் திடீர் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும் என்று PHE கூறியுள்ளது. இதில் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் கைகால்களில் வலி ஆகியவையும் ஏற்படலாம். "உங்களுக்கும் நோரோவைரஸ் அறிகுறிகள் இருந்தால், வீட்டிலேயே இருங்கள். அறிகுறிகள் முற்றிலும் நீங்கி 48 மணி நேரம் ஆகும் வரை, பெரியவர்கள் பணிக்கோ, குழந்தைகள் பள்ளிகளுக்கோ செல்ல வேண்டாம்.” என்று PHE தெரிவித்துள்ளது.


இந்த தொற்று பரவுவதை நிறுத்த, கை கழுவுதல் முக்கியமாகும். ஆனால், ஆல்கஹால் ஜெல்கள் நோரோவைரஸைக் கொல்லாது. எனவே சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கை கழுவ அறிவுறுத்தப்படுகிறது.


தேசிய நோய்த்தொற்று சேவையின் துணை இயக்குநர் பி.எச்.இ பேராசிரியர் சஹீர் கர்பியா கூறுகையில், "கொரோனா தொற்றுநோய் காலம் முழுவதும் நோரோவைரஸ் இயல்பை விட குறைந்த மட்டத்தில் இருந்துள்ளது. பல கட்டுப்பாடுகள் (Corona Restrictions) இருந்ததால் இந்த வைரசால் பரவ முடியாமல் இருந்தது. எனினும், தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அனைத்து வயது வரம்பினருக்கும் இடையே இந்த தொற்று அதிகமாக பரவுவதைக் காண முடிகின்றது.” என்று கூறினார்.


இதற்கிடையில், இங்கிலாந்தில் திங்களன்று சுமார் 40,000 பேர் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். கடந்த 7 நாட்களில் இங்கு 3.22 லட்த்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


ALSO READ: Monkeypox: 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை அச்சுறுத்தும் அரிய வகை நோய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR