பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நிலத்தின் தன்மையை வீணடிக்கிறது.  அதனால் பயோபிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  அந்தவகையில் இவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சால்மன் மீனின் விந்தணுக்களிலிருந்து காஃபி கப்பை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சால்மன் விந்தணுக்களில் இருந்து DNAவைக் கொண்டு சில ரசாயனங்களை கலந்து பயோபிளாஸ்டிக் கப்களை உருவாக்கியுள்ளனர்.  இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். 



சால்மன் விந்தணுக்களிலிருந்து DNA இழைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டு, அயனோமர்களுடன் கலக்கப்பட்டு, பசை போன்று உருவாகி பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கக்கூடிய ஒரு ஜெல்லை உருவாக்குகிறது.  இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் "அக்வா-வெல்டிங்" என்று அழைக்கின்றனர்.  இந்த ஜெல்லானது உலர்த்தப்பட்டு கப் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் செய்யப்படுகிறது.   இந்த செயல்முறை பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதை விட 97 சதவீதம் குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது.  தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளை காட்டிலும் இவை சுற்றுசூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



பயோபிளாஸ்டிக்குகள் சோள மாவு, மரத்தூள் மற்றும் உணவுக் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  இவை பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக இருந்தாலும் இவை சுற்றுசூழலுக்கு தகுந்ததாக உள்ளதா? என்பது சந்தேகம் தான்.  ஆனால் இதுபோன்ற  விந்தணுக்களிலின் DNAவிலிருந்து உருவாக்கப்படும் கப்புகள் பாதிப்பை ஏற்படுத்தாது, மேலும் இவற்றை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ALSO READ | எல்லாமே ‘பணத்திற்கு’ தான் ‘பொது நலன்’ அல்ல: இம்ரான் கானின் ஓப்புதல் வாக்குமூலம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR