எல்லாமே ‘பணத்திற்கு’ தான் ‘பொது நலன்’ அல்ல: இம்ரான் கானின் ஓப்புதல் வாக்குமூலம்!

ஆப்கானிஸ்தானில்  இருபது ஆண்டுகள் நடந்த பயங்கரவாத போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்த கான், தற்போது ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2021, 12:12 PM IST
  • ஆப்கானிஸ்தானின் கணக்குகள் மற்றும் பணப்புழக்கத்தை முடக்குவது, மிகவும் கொடும் செயல்.
  • இருபது ஆண்டு காலம் நீடித்த போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை விமர்சனம் செய்த இம்ரான் கான்.
  • இஸ்லாமாபாத்தில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார்.
எல்லாமே ‘பணத்திற்கு’ தான் ‘பொது நலன்’ அல்ல: இம்ரான் கானின் ஓப்புதல் வாக்குமூலம்! title=

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையில் 20 ஆண்டுகாலம் நடந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" பாகிஸ்தான் பங்கேற்றதற்கு  வருத்தம் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான்,  "டாலருக்காக" மட்டுமே  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் "பொது நலனுக்காக" அல்ல என்றும் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், “2001 ஆம் ஆண்டு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப், அமெரிக்கா தலைமையினான பயங்கரவாத எதிர்ப்பு  போரில் பாகிஸ்தான் பங்கேற்பதாக முடிவு செய்த போது, முடிவு எடுப்பவர்களுடன் நெருக்கமாக இருந்தேன் என்பதால்,  இந்த முடிவின் பின்னால் இருந்த உண்மையான காரணத்தை நன்கு அறிவேன்” எனக் கூறியுள்ளார்.

ALSO READ | உலகின் 3 ‘பலே’ திருடர்கள்! வியக்க வைக்கும் ‘Money Heist’ கொள்ளை சம்பவங்கள்..!

இருபது ஆண்டு காலம் நீடித்த  போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்து வரும் இம்ரான் கான், நாம் பணத்திற்காக நம் நாட்டின் நற் பெயரைத் தியாகம் செய்து, பொது நலனுக்கு எதிராக வெளிநாட்டுக் கொள்கையை கடைபித்தோம் என்றார். மேலும் 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்பது பாகிஸ்தான் (Pakistan) தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட  ‘காயம்’ என குறிப்பிட்டார்

அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு போரில் பங்கேற்றதன் விளைவாக பாகிஸ்தான் 80,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும், ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகளையும் சந்தித்து உள்ளது என இம்ரான் கான் குறிப்பிட்டார்.

ALSO READ | Tesla காரை வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்.. காரணம் என்ன தெரியுமா..!!!

ஆப்கானிஸ்தானின் கணக்குகள் மற்றும் பணப்புழக்கத்தை முடக்குவது, மிகவும் கொடும் செயல் என்றும், அங்குள்ள சூழ்நிலையை சரிசெய்வது முக்கியமானது என்றும் கூறினார்.

மேலும், இந்த கடினமான காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்யும் என உறுதி கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் எழுச்சியை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உலகம் ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News