september 29 snippets: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; அமெரிக்கா முதல் குவைத் வரை...
அமெரிக்கா, சீனா, செளதி அரேபியா, குவைத் என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, செளதி அரேபியா, குவைத் என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
குவைத்தின் அரசர் எமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் சபா (Emir Sheikh Sabah al-Ahmad al-Sabah) இறந்துவிட்டார் என்று அவரது அலுவலகம் செவ்வாயன்று அரசு தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
91 வயதான அரசர் ஷேக் சபா 2006 முதல் மன்னராக இருக்கிறார். அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தியுள்ளார். அரசர் ஷேக் சபா, தனது சகோதரர் இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவை பட்டத்து இளவராக அறிவித்திருந்தார். குவைத்தின் புதிய அரசராக Sheikh Nawaf al-Ahmad al-Sabah பதவியேற்பார்.
Trump-Biden விவாத நாடகத்தை நடத்துவதற்காக சீனாவின் தலையை உருட்டவேண்டாம் என்று பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்று China daily பத்திரிகை எச்சரிக்கிறது.
'Vatican தனது தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது’ என்று சீனாவுடனான உறவு தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ காட்டம்...
WHO: கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மில்லியன் இறப்புகள் என்பது 'மிகவும் சோகமான மைல்கல்'
அமெரிக்கா: டெக்சாஸில் மூளை உண்ணும் அமீபாவுக்கு ஆறு வயது சிறுவன் பலி.
கலிபோர்னியாவில் புகழ்பெற்ற ஒயின் பகுதிகள் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டன; ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பி ஓடுகிறார்கள்.
COVID-19க்கான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை தயாரித்த கமலேயா நிறுவனத்தின் தலைவரும், ரஷ்ய விஞ்ஞானியுமான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், 'போர்க்கால' அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார்.
China National Day அன்று எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களுக்கு ஹாங்காங் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.
Jamal Khashoggi கொலை தொடர்பாக செளதி அரேபியாவைச் சேர்ந்த மேலும் ஆறு பேர் மீது துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத திருட்டு விவகாரங்களால், ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் 89 மில்லியன் டாலர் வீணாவதாக ஐ.நாவின் ஆய்வு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.