56 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் தீவில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க  அவசர கால நடவடிக்கை குழு அமைத்துள்ளது. நாட்டில் கிணறுகள் அமைக்கப்பட்டு, செய்ற்கையாக மழை பெய்யச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு தைவானில் மிக மோசமான வறட்சி நிலவுகிறது, இதில் ஹிஞ்சுவின் (Hsinchu) முக்கிய பெருநகரங்கள், தைவானின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பல இடங்கள், தீவின் மையத்தில் உள்ள தைச்சுங் மற்றும் தெற்கே தைனன் மற்றும் கஹ்சியுங் ஆகியவை அடங்கும்.

நான்கு பெரிய அணைகட்டுகளில், நீர் மட்டம் மிக மிக குறைந்து, காலியாகும் நிலை உள்ளது . சில சிப்மேக்கர்கள் தங்கள் தயாரிப்பிற்காக டிரக் லோடு மூலம் தண்ணீரை வாங்குகிறார்கள், இருப்பினும் இதுவரை  பொதுவாக வீடுகளுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை தொடர்கின்றன. ஆனால், அதும் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

56 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் (Taiwan) தீவில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க  அவசர கால நடவடிக்கை குழு அமைத்துள்ளது. நாட்டில் கிணறுகள் அமைக்கப்பட்டு, செயற்கையாக மேகங்களை உருவாக்கி மழை பெய்யச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேற்கு தைவானில் மிக மோசமான வறட்சி நிலவுகிறது, இதில் ஹிஞ்சுவின் (Hsinchu) முக்கிய பெருநகரங்கள், தைவானின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பல இடங்கள், தீவின் மையத்தில் உள்ள தைச்சுங் மற்றும் தெற்கே தைனன் மற்றும் கஹ்சியுங் ஆகியவை அடங்கும்.

நான்கு பெரிய அணைகட்டுகளில், நீர் மட்டம் மிக மிக குறைந்து, காலியாகும் நிலை உள்ளது . சில சிப்மேக்கர்கள் தங்கள் தயாரிப்பிற்காக டிரக் லோடு மூலம் தண்ணீரை வாங்குகிறார்கள், இருப்பினும் இதுவரை  பொதுவாக வீடுகளுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை தொடர்கின்றன. ஆனால், அதும் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

ALSO READ | Study: ஐரோப்பாவில் 2000 வருடத்தில் மிகவும் மோசமான வறட்சி, வெப்ப அலைகள்

அதிகாரிகள் மற்ற நீர்த்தேக்கங்களிலிருந்து ஹிஞ்சுவுக்கு நீரை கொண்டு வர குழாய் பதித்து வருகின்றனர்.  ஆனால் அது போதுமானதாக இல்லை, இப்போது கிணறுகளும் தோண்டப்படுகின்றன.

வசந்த காலத்தின் பிற்பகுதியில் தொடங்கும் 'plum rain' பருவம், வறட்சியை தீர்க்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள், ஆனால் தற்போதுள்ள இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் தைச்சுங்கில், மழை வேண்டி பெரிய அளவில் கடல் அன்னையை வேண்டிய பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.  இது 58 ஆண்டுகளில் முதல் முறையாக நடைபெற்றது.

சுமார் 3,000 பேர், பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் தைச்சுங் மேயர் லு ஷியோவ்-யென், கடல் தெய்வமான மஸுவிடம் பிரார்த்தனை செய்தனர், கடல் அன்னையை வணங்கி பிரார்த்தனை செய்தால், வறட்சி நீங்கி மக்கள் வளம் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

மேலும், தைவானின் விமானப்படை மூலம், செய்ற்கையாக மேகங்களை உருவாக்க  சி -130 போக்குவரத்து விமானங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.

ALSO READ | Elon Musk ஒரே நாளில்  உலக பணக்காரர் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட காரணம் என்ன ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR