மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரானில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரிய தாய்க்கு நீதிமன்றம், கொடூரமான தண்டனை விதித்துள்ளது. நீதி கேட்ட அந்த தாய்க்கு 100 கசையடிகள் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'ஜெருசலேம் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியில், மெஹபூபா ரம்சானி என்ற அந்த தாய் தனது மகனைக் கொலை செய்த அதிகாரிகளை தண்டிக்க 'மதர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்' ('Mother's of Justice') என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறார், இதனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவர் மீது கோபமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டில், கொலை செய்யப்பட்ட மகன் பணவீக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்


மெஹபூபா ரம்ஜானி தனது மகன் ஜமான் கோலிபூரின் மரணம், கொலை எனக் கூறி, அதிகாரிகளை தண்டிக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். ரம்சானியின் மகன் ஜமான் 2019 ஆம் ஆண்டில் மக்கள் இயக்கத்தில் ஈடுபட்டார். இதில் ஈரானிய மக்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கியதில், நிர்வாகம் கடும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்கள் இயக்கத்தின் போது, ​​போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜமான் உட்பட சுமார் 1500 பேர் கொல்லப்பட்டனர்.


மேலும் படிக்க | புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்


ஹிஜாபை எதிர்த்ததற்காக ரம்ஜானி கைது செய்யப்பட்டார்


அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பி நீதிமன்றத்திற்கு சென்று நீதி கேட்கும், ரம்ஜானியின் குரலை ஒடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஹிஜாபை எதிர்த்து குரல் எழுப்பியதற்காக கடந்த வாரம் பல பெண்களுடன் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று தனது மகனுக்கு நியாயம் கேட்ட நிலையில், அவருக்கு இந்த கொடூர தண்டனை விதிக்கப்பட்டது.



ரம்ஜானி மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று தனது மகனுக்கு நீதி கோரினார். அமெரிக்காவில் இருக்கும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களும், இவர்க்கு ஆதரவாக, குரல் எழுப்பியது ஈரானிய ஆட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஈரானில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைக்கு ஈரானியர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, ரம்ஜானிக்கு சவுக்கடி கொடுப்பதற்கான தேதியை அரசாங்கம் இன்னும் நிர்ணயிக்கவில்லை.


மேலும் படிக்க | Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்


மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ