புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்

புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழுந்தாலும். அதற்காக கடுமையான சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2022, 06:35 PM IST
  • நியூசிலாந்தில் சிகரெட் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது
  • சிகரெட் தடைக்கு எதிரான புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு.
புகைபிடிக்க தடை:  புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம் title=

நியூசிலாந்தில் சிகரெட் தடை: நியூசிலாந்தில் இனி, 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது. இதனால், இனி வரும் தலைமுறையினர் புகை பிடிக்க இயலாது.  இதற்காக நியூசிலாந்து அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யும் இந்த புதிய நியூசிலாந்து சட்டத்தின்படி,  இனி 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் 18 வயதை எட்டிய பிறகும் புகைபிடிக்க முடியாது. நியூசிலாந்து எம்.பி.க்கள் அனைவரும் இது குறித்த சட்ட இயற்ற ஒருமனதாக ஒப்புக் கொண்டு உள்ளனர்.

இளைஞர்கள் சிகரெட் வாங்குவதை தடுக்க சட்டம்

நியூசிலாந்து அரசாங்கம் புகைக்கும் பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புதிய சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது, இளைஞர்கள் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதைத் தடுக்கும் வாங்கும் வயதைச் சேர்த்தது.

மேலும் படிக்க | Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

பிரத்யேக கடைகளில் சிகரெட் கிடைக்கும்

புதிய மசோதா தொடர்பாக நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. புகைபிடிக்கும் வயதை அதிகரிப்பதுடன், சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவைக் கடுமையாகக் குறைத்து, கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்காமல், பிரத்யேகமான புகையிலை கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் வழங்கிய ஆதரவு

பெரும்பாலான கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. தனது கட்சி சட்டத்தை ஆதரிக்கிறது என்று எதிர்க்கட்சியான தேசிய கட்சியின் மாட் டுசி கூறினார். எனினும், இந்தச் சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்து அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, லிபர்டேரியன் சட்டக் கட்சி மட்டுமே அதை எதிர்த்தது.

2025  ஆண்டின் இலக்கு

இந்த மசோதாவை நிறைவேற்றிய பின், 2025ல், நாட்டின் மக்கள் தொகையில், 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே புகைப்பிடிப்பார்கள் என, அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், 2007 க்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகைபிடித்தல் மற்றும் இ-சிகரெட்டுகள் உட்பட அனைத்து புகையிலை பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்தும் மலேசியாவும் பரிசீலித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் 10.7% மக்கள் புகைப்பிடிக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வழக்கறிஞகள் புகை பிடிப்பதை தடை செய்து குறித்து கூறுகையில், நியூசிலாந்தைப் போலவே,  புகை பிடிப்பதை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்படலாம் என்கிற்றார்கள், ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையில் வெறும் 10.7 சதவீதத்தினர் மட்டுமே புகை பிடிக்கின்றனர்.  இது உலகின் மிகக் குறைவான அளவாகும்.

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News