World Bizarre News: அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணை நடத்த போலீசார் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இங்கு முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மார்ச் 14ஆம் தேதி இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான் என அந்த சிறுவனின் பெற்றோர் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள்  காலை அந்த சிறுவன் பேச்சு மூச்சற்று வீட்டில் கண்டறியப்பட்டுள்ளார். 


இரவில் தென்பட்ட அறிகுறிகள் 


மேலும், ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது என அந்த சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பட்ட உடன் Benadryl என்ற மருந்தை கொடுத்து, அவனை குளிப்பாட்டியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த அறிகுறிகள் மோசமானதை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். 


மேலும் படிக்க | அமெரிக்காவில் வினோதம்... கிரீன் ஹவுஸ் வாயுக்களை கடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை!


சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். அடுத்த நாள் காலையில் பள்ளி செல்லுவதற்காக சிறுவனை பெற்றோர் எழுப்பியபோது அவன் எவ்வித பதிலும் சொல்லாமல் பேச்சுமூச்சற்று இருந்துள்ளான். இதை தொடர்ந்து அவன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனின் மரணத்திற்கு பின் ஹாப்கின்ஸ் கவுண்டி மருத்துவத்துறை மேற்கொண்ட உடற்கூராய்வில் அந்த சிறுவன் அலர்ஜியால் உயிரிழந்தான் என தெரியவந்தது. 


ஸ்ட்ராபெர்ரிக்கு தடை


இதுகுறித்து அவனது உடலை ஆராய்ந்த மருத்துவர் கூறுகையில்,"அந்த சிறுவனுக்கு ஸ்ட்ராபெர்ரி அலர்ஜி என இந்த சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. ஹாப்கினஸ் கவுண்டி மருத்துவ துறையின் தலைமை இயக்குநர்,"இப்போது வெளிவந்தது முதற்கட்ட ஆய்வு அறிக்கை. இருப்பினும், இன்னும் சில நாள்களுக்கு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார். அந்த சிறுவனுக்கு ஸ்ட்ராபெரி அலர்ஜி இருக்கிறதா இல்லையா என்பது கண்டறியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


சிறுவன் மரணத்திற்கு பிறகு போலீசார் அனைவருக்கும் அறிவுரையை வழங்கினர். ஹாப்கின்ஸ் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரியை யாரும் சாப்பிட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும், மருத்துவத்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,"தற்போது பொது மருத்துவத்துறை கென்டக்கியின் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை பரிசோதித்து வருகின்றன. இது தற்செயலான சம்பவம் என்றாலும் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக யாரும் தற்போதைக்கு ஸ்ட்ராபெர்ரிகளை உண்ண வேண்டாம்" என தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளும் தேர்தல் முறைகேடுகளும்! கட்சிகளுக்கு ஏற்ப மாறும் காட்சிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ