ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மையா... பெரியவர், சிறியவர் அனைவருக்கும் ஏற்றது!

Health Benefits Of Strawberry Juice: ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஜூஸாக குடிக்கும்போது, உங்கள் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழத்தை அப்படியே சாப்பிட்டாலும் பல நன்மைகள் கிடைக்கும். எனினும், கோடை காலத்தில் நீங்கள் ஜூஸாக எடுத்துக்கொள்ளும்போது உடல் நீரேற்றமாகவும் இருக்கும்.

 

1 /7

Health Benefits Of Strawberry Juice: ஸ்ட்ராபெர்ரி பழத்தை தோல் சீவி, மீக்ஸியில் பால் சேர்த்து அடித்து ஜூஸாக குடிக்கலாம். தேவையென்றால் இனிப்பை சேர்க்கலாம். எனினும் சர்க்கரை போன்ற இனிப்பு இல்லாமல் குடிப்பது கூடுதல் நன்மையை தரும்.   

2 /7

மூளை இயக்கத்தை அதிகப்படுத்தும்: ஸ்ட்ராபெர்ரியில் அதிக ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இதில் மூளை செல்கள் சேதமாவது தடுக்கப்பட்டு, அறிவாற்றலுடன் செயல்பட வழிவகுக்கும். மேலும், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கும்போது, உங்கள் நியாபக சக்தி அதிகரித்து, கவனமும் அதிகரிக்கும்.   

3 /7

அலர்ஜியை விரட்டும்:  முன்பு சொன்னதுபோல், இதல் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமிருப்பதால், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் உடல் முழுவதும் உள்ள ஒவ்வாமைகளை குறைக்கும். குறிப்பாக ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை நிலைகளின் அறிகுறிகளின் தாக்கத்தை குறைக்கிறது.   

4 /7

பெரியவர்களும் குடிக்கலாம்: ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமிருப்பதால் சில அலர்ஜிகள் தடுக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இதன்மூலம், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, குறைவான கலோரி மற்றும் குறைவான சுகர் கொண்ட ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், உங்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக்க வைத்திருக்க உதவும், கூடுவே இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.   

5 /7

உடல் எடை குறைப்பில்...: ஸ்ட்ராபெர்ரி ஜூஸில் குறைவான கலோரிகள் நிறைவான ஃபைபர் உள்ளது.  இது உடல் எடை குறைப்பில் நல்ல பலன்களை தரும். ஸ்ட்ராபெர்ரியை ஜூஸாக குடிக்கும்போது வயிறு நிரம்பிய உணர்வு தரும், இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவு குறையலாம். 

6 /7

எலும்பையும் வலுவாக்கும்: இதில் கால்சீயம், மேக்னீசியம் உள்ளிட்ட எலும்பை வலுவாக்கும் தாதுக்கள் இருக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்தால் எலும்பு ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும். இதனால், எலும்புப்புரை தடுக்கப்படும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடித்தால் வரும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்கள், வீட்டு மருத்துவம் சார்ந்தவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. எனவே, இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக உங்கள மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.