அமெரிக்காவின் புளோரிடாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸால் முதல் மரணம்: உலகில் லட்சக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் சிக்கவைத்த கொரோனா தொற்றுநோய் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஆனால், அதற்குள் மற்றொரு புதிய நோயின் ஆபத்து பற்றிய செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. மூளையை தின்னும் ஒரு அமீபாவால் ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மரணத்திற்குப் பிறகு, புளோரிடா நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த அமீபா குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 


நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது


இறந்தவரின் அடையாளத்தை புளோரிடா சுகாதாரத் துறை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இந்த மரணம் பிப்ரவரி இறுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மரணத்திற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதில் சுகாதாரத்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 


வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும் என நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதாவது காரணத்தால் நேரடியாக குழாய் தண்ணீரை குடிக்க வேண்டி வந்தால், அதை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொதிக்க வைப்பதால் பச்சைத் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் இறந்துவிடும், அதன் பிறகு, அதை ஆறவைத்து குடிக்கலாம் என நிர்வாகம் கூறியுள்ளது.


மேலும் படிக்க | இம்ரான்கானை கைது செய்ய விரையும் போலீஸார்! லாகூரில் பதற்றம்!


இந்த இடங்களில் அமீபா காணப்படுகிறது


மூளையை உண்ணும் அமீபா நெக்லேரியா ஃபோலேரி என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு செல் உயிரினமாகும். இது பொதுவாக நிலத்தடியில் அல்லது குளிர்ந்த, சூடான நீரில் காணப்படுகிறது. ஏரிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள் இந்த அமீபாவின் விருப்பமான இடங்களாகும். இந்த இடங்களில் இந்த அமீபா காணப்படும். இந்த தெர்மோபிலிக் அமீபா நதி, நீரூற்று அல்லது ஏரியில் குளிக்கும் போது மூக்கு வழியாக உடலில் நுழைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


மூளையின் நரம்புகளைக் கொறிக்கிறது


உடலில் நுழைந்த பிறகு, இந்த அமீபா (Brain Eating Amoeba) முன்னோக்கி நகர்ந்து மூளை மற்றும் முதுகெலும்புக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அங்கு சென்றதும், தலையின் இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு செல்களை அவை அழிக்கின்றன. இதன் காரணமாக, தலையில் வீக்கம் மற்றும் திசுக்களின் அழிவு தொடங்குகிறது. இறுதியில் இது ஒரு தீவிரமான மற்றும் அரிதான நோயின் வடிவத்தை எடுக்கும். இது பாதிக்கப்பட்டவருக்கு உயிர்வாழ்வதை மிகவும் கடினமாக்குகிறது. இது மிகவும் ஆபத்தான நோய் என்றாலும், இந்த நோய் தொற்றுநோய் அல்ல, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.


தென் கொரியாவிலும் மரணம் நிகழ்ந்துள்ளது


சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜே வில்லியம்ஸ் கூறுகையில், 'நெக்லேரியா ஃபோலேரியால் (மூளை உண்ணும் அமீபா) தொற்று ஏற்படுவது அரிதானது.' என்றார். அமீபாவால் அசுத்தமான நீர் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் போது மட்டுமே இது நிகழும். குழாய் நீரைக் குடிப்பதால் மக்களுக்கு தொற்று ஏற்படாது. அமெரிக்காவில் ஏற்பட்ட மரணத்துக்கு முன்னரே தென் கொரியாவில் இதுபோன்ற ஒரு மரணம் நடந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம்! விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ