வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம்! விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!

மனிதர்கள் வெட்டு பட்டால் ரத்தம் வெளியேறுவதைப் போல், இந்த அதிசய மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுகிறது. இயற்கையின் அதிசயமாக இருக்கும் அதிசய ‘Bloodwood Tree’ பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2023, 04:24 PM IST
  • வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற இரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது.
  • கடுமையான காயத்தை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.
  • மரத்தின் சராசரி நீளம் 12 முதல் 18 மீட்டர் வரை இருக்கும்.
வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம்! விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!  title=

மருத்துவ அறிவியல் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், இயற்கையில் தீர்க்க முடியாத மர்மமான பல விஷயங்கள் உள்ளன, அவற்றின் ரகசியங்களும் நன்மைகளும் அதிர்ச்சியளிக்கின்றன. விஞ்ஞானிகளும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சரியப்படுகிறார்கள். வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற இரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வெளியேறும் திரவம், மனிதர்களின் ரத்தம் போலவே இருக்கும். இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர்.

'செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்' 

மனிதர்கள் வெட்டு பட்டால் ரத்தம் வெளியேறுவதைப் போல், இந்த அதிசய மரத்தை வெட்டினால் ரத்தம் கொட்டுகிறது. இயற்கையின் அதிசயமாக இருக்கும் அதிசய ‘Bloodwood Tree’ பற்றி அறிந்து கொள்ளலாம். 'செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த மரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். உண்மையில், இந்த மரத்தின் பெயர் இரத்த மரம் . இதன் அறிவியல் பெயர் 'Cerocarpus Angolansis'. இந்த மரம் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இது காணப்படும் நாடுகளில் மொசாம்பிக், நமீபியா, தான்சானியா மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகள் அடங்கும். இருப்பினும், இப்போது அது மற்ற இடங்களிலும் காணப்படுகிறது.

மரத்தின் சாறு

ஊடக அறிக்கைகளின்படி, இந்த மரம் சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த மரத்தை வெட்டியதும் அதிலிருந்து சிவப்பு நிற ரத்தம் வரும். உண்மையில் இது இரத்தம் அல்ல, ஆனால் தோற்றத்தில் மனித இரத்தம் போல தோற்றமளிக்கும் மரத்திலிருந்து வெளியேறும் ஒரு திரவம். மக்கள் அதை இரத்தம் என்றே கருதுகின்றனர்.

மேலும் படிக்க | அமெரிக்க எம்பயர் கட்டடத்தின் பரம ரகசியம்...! நாணயம் உயிரை கொல்லுமா?

நோய்களும் குணமாகும்

இந்த மரத்தின் உதவியுடன் மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், இதனுடன் இரத்தம் தொடர்பான நோய்களும் மரத்தின் மூலம் குணப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ரிங்வோர்ம், கண் பிரச்சனைகள், வயிற்று நோய், மலேரியா அல்லது கடுமையான காயத்தை குணப்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு. இந்த மரத்தைப் பற்றி பேசுகையில், அதன் மரம் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் விலை உயர்ந்தது. மரத்தின் சராசரி நீளம் 12 முதல் 18 மீட்டர் வரை இருக்கும்.

மேலும் படிக்க | நீர்யானைகளை இந்தியவிற்கு அனுப்ப தயாராகும் கொலம்பியா... காரணம் ‘இது’ தான்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News