கோவிட் தொற்றுநோயால் இன்னும் 1 லட்சம் பேர் இறப்பார்கள்: எச்சரிக்கும் நிபுணர்கள்
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, புதன்கிழமை ஜெர்மனி அதன் மிக உயர்ந்த தொற்றுநோய் எண்ணிக்கையை பதிவு செய்தது.
Coronavirus: உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முழுமையாகத் தீரவில்லை. வீரியம் அதிகம் உள்ள தொற்றின் நான்காவது அலையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், உலக அளவில் மேலும் 100,000 பேர் கோவிட்-19 நோயால் இறக்க நேரிடும் என்று ஜெர்மனியின் சிறந்த வைராலஜிஸ்ட்களில் ஒருவரான கிறிஸ்டியன் ட்ரோஸ்டன் எச்சரித்துள்ளார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் (Coronavirus) தொடங்கியதிலிருந்து, புதன்கிழமை ஜெர்மனி அதன் மிக உயர்ந்த தொற்றுநோய் எண்ணிக்கையைப் பதிவு செய்தது. தொற்று எண்ணிக்கை அங்கு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அங்கு ஒரு நாளில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுகின்றனர்.
"நாம் இப்போதே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று டிரோஸ்டன் கூறினார். தற்போது ஒரு தீவிரமான அவசர நிலை உருவாகியுள்ளது என அவர் இந்த நிலையை விவரித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட் (COVID 19) வார்டின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள், நான்காவது அலை இன்னும் மோசமானதாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
ALSO READ:டெல்டா மாறுபாட்டால் சீனாவில் மீண்டும் தலைதூக்கி பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்
ஜெர்மனியில் 100,000 பேருக்கு 459 நோய்த்தொற்றுகள் என்ற விகிதத்தில் சாக்சோனி மாநிலத்தில் ஏழு நாட்களில் இல்லாத அளவுக்கு மிக அதிக தொற்று வீதம் உள்ளது. தேசிய விகிதம் 232 ஆக உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், சாக்சோனியில், தடுப்பூசி போடாதவர்கள், பார்கள், உணவகங்கள், பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மற்றும் கேளிக்கைக்கான இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
கடந்த வார இறுதியில் லீப்ஜிக்கில் ஆயிரக்கணக்கான தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 வயதுக்கு மேற்பட்ட பதினாறு மில்லியன் ஜெர்மானியர்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி (Vaccine) போடவில்லை. ஜெர்மன் அரசாங்கம் இப்போது அவர்களில் பலரை வற்புறுத்துவது சாத்தியமில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி வற்புறுத்தினால், இதனால் சமூகப் பிளவுகள் ஆழமடையும் என்று அரசியல்வாதிகள் கவலைப்படுகிறார்கள்.
ALSO READ:கிளாஸ்கோ COP26 காலநிலை மாற்ற மாநாடு மற்றும் நாசாவின் பங்கேற்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR