கிளாஸ்கோ COP26 காலநிலை மாற்ற மாநாடு மற்றும் நாசாவின் பங்கேற்பு

26வது ஐக்கிய நாடுகளின் COP26 நாசா பங்கேற்கிறது. இந்த உச்சிமாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் நாடுகளை ஒன்றிணைத்து இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2021, 02:22 PM IST
  • கிளாஸ்கோவில் ஐநாவின் 26வது காலநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது
  • COP26 உச்சிமாநாட்டில் நாசா பங்கேற்கிறது
  • நிலக்கரி மூலம் மின்சார தயாரிப்பதை நிறுத்த 40 நாடுகள் ஒப்புக் கொண்டன
 கிளாஸ்கோ COP26 காலநிலை மாற்ற மாநாடு மற்றும் நாசாவின் பங்கேற்பு title=

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 26வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) நாசா பங்கேற்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் COP26 உச்சிமாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் நாடுகளை ஒன்றிணைத்து இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள நாசா தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி விண்வெளியில் நமது தவிர்க்க முடியாத வளங்களை கொண்டு வருவதாக நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறுகிறார்.

"பூமியைக் கண்காணிக்கும் நாசாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகள் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நமது சொந்த கிரகத்தைப் பற்றிய இணையற்ற புரிதலை வழங்குகின்றன, COP26 இல் பங்கேற்பதன் மூலம் மனிதகுலத்திற்கான அவசர மாற்றத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read | G-20 Tax Deal: கார்பரேட் வரி குறைந்தபட்சம் 15 சதம்; தலைவர்கள் ஒப்புதல்

நாசாவின் மூத்த காலநிலை ஆலோசகர் கவின் ஷ்மிட், நாசாவின் தலைமை விஞ்ஞானி ஜிம் கிரீன் மற்றும் நாசாவின் தலைமை அதிகாரி சூசி பெரெஸ் க்வின் ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.  

நாசா ஹைப்பர்வால் (NASA Hyperwall) இந்த மாநாட்டில் முக்கியமான ஈர்ப்பாக இருக்கும். நாசா விஞ்ஞானிகள் ஒரு நாளைக்கு இரண்டு விளக்கக்காட்சிகளை வழங்குவார்கள், காலநிலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் நாசாவின் உலகளாவிய தலைமை எவ்வாறு கடல் ஆரோக்கியம், வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வெள்ளம் மற்றும் வறட்சிகளை மாதிரி மற்றும் கணிக்க உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.

இதுவரை நடந்துள்ள இந்த காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப் போவதாக 40 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. 

Also Read | பாகிஸ்தானின் விநோத சட்டங்கள்; மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ.. 

பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவிவெப்பமயமாதலின் பேரழிவுகளைத் தடுப்பதற்காக சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக, நிலக்கரி, பெட்ரோல்,  டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்னும்  தொடங்கப்படவில்லை என்ற கவலைகளுக்கு மத்தியில் தற்போது நிலக்கரி மின் நிலையங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 40 நாடுகள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

உலகில் மிக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 20 நாடுகள் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம், போலந்து, உக்ரைன் ஆகிய 5 நாடுகள் நிலக்கரி மின்னுற்பத்தியை கைவிடுவதாக அறிவித்துள்ளன.  ஆனால் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமான இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் இது குறித்து எதுவும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News