Afghanistan Crisis: இந்தியாவை பற்றிய தலிபான் நிர்வாகத்தின் கருத்து இதுவே!
இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் இந்தியாவைப் பற்றி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai) தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. தாலிபன் அரசு அண்டை நாடுகளிடையே எந்த சார்புத்தன்மையையும் எடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் இருந்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க தலிபான்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும், புதிய தலிபான் ஆட்சியாளர்கள் இந்திய அரசாங்கத்துடன் நட்புறவை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ALSO READ | உடனடியாக காபூல் விமான நிலைய பகுதியை விட்டு வெளியேறவும்: அமெரிக்க அரசு எச்சரிக்கை
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் பின்வாங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் நட்புறவு வைத்திருப்போம். எனவே, அவர்கள் திரும்பி வந்து ஆப்கானிஸ்தானின் மறுவாழ்வில் பங்கேற்க வேண்டும் என்று ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் தெரிவித்தார்.
இந்தியாவுடன், நட்பு ரீதியிலான, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர விரும்புகிறோம் என்றும், இந்தியாவுடன் மட்டுமல்ல, தஜிகிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளுடன் தாலிபன் அரசு இணக்கமாகவே செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட அரசியல் மற்றும் புவியியல் தகராறு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அண்டை நாடுகள் இரண்டுக்கும் இடையிலான சண்டையில் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்தார் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய்.
READ ALSO | அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் இரு ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: பென்டகன்
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொந்த நிலம் இது, அவர்கள் இங்கேயே அமைதியாக வாழலாம். அவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. முன்பு எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே அவர்கள் வாழலாம். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் அறிவிக்கப்படும் போது, அமெரிக்கா உட்பட பிராந்தியத்துடன் தொடர்புடைய அனைத்து நாடுகளும் தங்களை ஆதரிப்பார்கள் என நம்புவதாக ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் தெரிவித்தார்.
இந்தியா ஆப்கானிஸ்தானில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளது. அவை தேசிய சொத்துக்கள் என்பதால் அவற்றை முறையாக பராமரிப்போம் என்று கூறும் ஷேர் முகமது, தற்போது பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேலைகளையும் இந்தியா முடித்துக் கொடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்பான தாலிபன்களின் இந்த கருத்துக்களை சொல்வது இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் என்பதால் இவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.
READ ALSO | திடீரென்று காபூலில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதலா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR