Sri Lanka: மிளகாய் ரூ. 710/கிலோ, உருளை ரூ. 200/கிலோ, நிதி நெருக்கடியால் தத்தளிக்கும் இலங்கை
இலங்கை கிட்டத்தட்ட திவால் நிலையை அடைந்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, அங்கு பணவீக்கம் 11.1 சதவீதம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கை கிட்டத்தட்ட திவால் நிலையை அடைந்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, அங்கு பணவீக்கம் 11.1 சதவீதம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இதுமட்டுமின்றி, அங்குள்ள மக்கள் பணவீக்கத்தின் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இலங்கையின் Advocata Institute பணவீக்கம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் உணவுப் பொருட்களின் விலை ஒரு மாதத்தில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக (Price Hike) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேசிய நிதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, இலங்கையின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர், உணவுப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அரசாங்கம் தேசிய நிதி நெருக்கடியை அறிவித்தது. சீனா (China) உட்பட பல நாடுகளிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கை பெரிய அளவிலான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
ஒரு மாதத்தில் பணவீக்கம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது
Advocata Institute வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நவம்பர் 2021 மற்றும் டிசம்பர் 2021 க்கு இடையில் இலங்கையில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இலங்கையில் 100 கிராம் மிளகாயின் விலை 18 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 71 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ மிளகாயின் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் விலை ஒரே மாதத்தில் 287 சதவீதம் அதிகரித்துள்ளது.
ALSO READ | வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை; எச்சரிக்கும் உலக நாடுகள்!
1 கிலோ உருளைக்கிழங்கு விலை 200 ரூபாயை எட்டுகிறது
இது தவிர, கத்தரிக்காயின் விலை 51 சதவீதமும், வெங்காயத்தின் விலை 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. இங்கு வரத்து இல்லாததால், பால் பவுடரை கூட மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 200 ரூபாயை எட்டியுள்ளது.
மற்ற காய்கறிகளின் விலைகள்
தக்காளி - ரூ 200/கிலோ
கத்தரிகாய் - ரூ 160/கிலோ
வெண்டைக்காய் - ரூ 200/கிலோ
பாகற்காய் - ரூ 160/கிலோ
பீன்ஸ் - ரூ 320/கிலோ
முட்டைக்கோஸ் - ரூ 240/கிலோ
கேரட் - ரூ 200/கிலோ
வாழைக்காய் - ரூ 120/கிலோ
இலங்கை இரட்டை இழப்பை சந்தித்து வருகிறது
கொழும்பு வர்த்தமானியின் அறிக்கையின்படி, கடந்த தசாப்தத்தின் பெரும்பகுதியில் இலங்கை (Sri Lanka) இரட்டிப்பு இழப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஒன்று நிதிப் பற்றாக்குறை மற்றொன்று வணிகப் பற்றாக்குறை. 2014 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மீதான வெளிநாட்டுக் கடன் அளவும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில், இந்த கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதத்தை எட்டியுள்ளது.
ALSO READ | வட கொரியாவில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் அதிகாரிகள்: காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR