நியூடெல்லி: இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிப்பதன் மூலம் புகைபிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கான தனித்துவமான திட்டத்தை நியூசிலாந்து நாடு செவ்வாயன்று சட்டமாக்கியது. 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையை விற்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது என்ன பெரிய விஷயம்? 13 வயது சிறார்களுக்கு சிகரெட் விற்க தடை விதிப்பதில் என்ன விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறதா? இந்தத் தடை 2009 ஆண்டு மற்றும் அதற்கு பின் பிறந்த அனைவருக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது இந்தச் சட்டத்தின் தனித்துவம் புரிகிறதா? இந்தச்சட்டத்தின்படி, இனிமேல் சிகரெட் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் வயது கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படும்.


சிகரெட்டுகளை வாங்க நிபந்தனைகள் 


அதாவது சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கும். கோட்பாட்டளவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்க முயற்சிப்பவருக்கு குறைந்தபட்சம் 63 வயது என்பதை நிரூபிக்க ஐடி தேவை. ஆனால், இதற்கு முன்னதாகவே நாட்டில் புகைபிடித்தல் குறையும் என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து 2025ஆம் ஆண்டுக்குள் புகை இல்லாத நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது.


புதிய சட்டம் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000 இலிருந்து 600 ஆகக் குறைக்கும், மேலும் சிகரெட் இல்லாத புகையிலையில் குறைந்த நிகோடின் உள்ளடக்கம் மட்டுமே இருக்கும்.


மேலும் படிக்க | குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம்; சலுகைகளை அள்ளி வீசும் ஜப்பான் அரசு!


நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு


இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால், “ஒரு பொருளைப் பயன்படுத்துபவர்களில் பாதி பேரைக் கொல்லும் ஒரு பொருளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு எந்த நல்ல காரணமும் இல்லை. எதிர்காலத்தில் இதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று என்னால் சொல்ல முடியும், ஏனென்றால் இந்த சட்டத்தை நிறைவேற்றுவோம், மக்களைக் காப்பாற்றுவோம். இந்த சட்டம் தலைமுறை மாற்றத்தை கொண்டு வரும், இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.


இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 76:43 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்த ACT கட்சி, சிகரெட் விற்பனையை தடை செய்வதால் பல சிறிய கடைகளில் வியாபாரம் முடங்கிவிடும் என்று கூறியது.


நியூசிலாந்தின் வயது வந்தவர்களில் எட்டு சதவீதம் பேர் தினசரி புகைபிடிப்பதாக நியூசிலாந்தின் புள்ளிவிவரங்கள் கடந்த மாதம் அறிவித்தது, இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு 16 சதவீதமாக இருந்தது. நியூசிலாந்து ஏற்கனவே 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனையை ஒழுங்குபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ