இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இளம் வயதினருக்கு நீரிழிவு நோய் அதிகம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு இளம் வயதினருக்கு அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது, மேலும் இது குழந்தைகளுக்கும் உள்ளது. ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் நீரிழிவு நோயால் பாதித்த 40 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2016-17-ல் சுமார் 120,000 ஆக இருந்த எண்ணிக்கை 2020-21-ல் 148,000 ஆக 23% உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களை விட இளம் வயதினருக்கு தான் நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை அறிய முடிகிறது.
நீரிழிவு நோயினால் இளம்வயதினருக்கு ஏற்படும் அறிகுறிகள் :
- அதிக தாகம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சோர்வடைதல்
- கால்களில் உணர்வின்மை
- பார்வை கோளாறு
- பார்வை மங்கலாகுதல்
மேலும் படிக்க | Heath Alert: பச்சையாக சாப்பிடக் கூடாத ‘சில’ காய்கறிகள்!
நீரிழிவு நோயின் அபாயத்தை தடுப்பு வழிமுறைகள்:
1. உடல் செயல்பாடு நீரிழிவு நோய் வராமல் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, முடிந்த அளவு நடைபயிற்சி, வீட்டு வேலைகள், தோட்டக்கலை, 20 கிலோ எடையுள்ள பொருட்களை நகர்த்துதல், சுறுசுறுப்பான பொழுதுபோக்கு, நடனம் போன்ற மிதமான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.
2. 5% எடை எடை இழப்பதால் வளர்சிதை மாற்றத்தில் ஆரோக்கியமான மாற்றம் நீரிழிவு நோயின் அபாயமும் குறையும். புரோட்டீன்களை அதிகமாகவும், கார்போஹைட்ரேட்டுகளைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்துவது நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
4. மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும், அதற்கு இசை கேட்பது, நடனம், ஆலோசனை, தியானம், யோகா, தினமும் சில நிமிடங்கள் மௌனப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
5. நீரிழிவு நோயைத் தடுக்க குறைந்தபட்சம் ஏழு மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.
மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ