India China Tension: 2023ம் ஆண்டாக மலரவிருக்கும் புத்தாண்டில் சீனா, இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று கூறப்படுகிறது. 2023ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏன் அதிகம்? இது தொடர்பான விரிவான அலசல் இது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு உலகை உலுக்கும் விஷயமாக ரஷ்யா - உக்ரைன் போர் இந்த ஆண்டு தொடங்கியது. 2022ஆம் ஆண்டை பதற்றம் நிறைந்த ஆண்டாக மாற்றியது ரஷ்யாவின் போர் என்றால், அதன் பிறகு, வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயும் போர்ச் சூழல் உருவாகி வந்தது.
சில சமயம் சீனாவும் அமெரிக்காவும், சில சமயங்களில் சீனா தைவான், சில சமயங்களில் தென் கொரியா, ஜப்பான் வடகொரியா என இந்த ஆண்டு பதற்றங்கள் நிறைந்த ஆண்டாகவே தொடர்கிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு, உலகம் புத்தாண்டில் நுழைந்தாலும், இந்த ஆபத்து குறைவதாகத் தெரியவில்லை.
2023 இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம். இதற்கு கட்டியம் கூறுவதாக, பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.
இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார் என்பதும், இதற்கு முன்னதாகவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தில் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
சீனா, தற்போது பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் சண்டையிட்டு வருகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போருக்கு பல காரணங்கள் உள்ளன, இவைகளை அடிப்படையாகக் கொண்டால், 2023 இல் இருவருக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்தக் காரணங்கள் இவைதான்
இரு நாடுகளுக்கும் இடையே நிலையான பதற்றம்
இந்தியா 1962 இல் சீனாவுடன் அறிவிக்கப்பட்ட போரை நடத்தியது. அதன்பிறகு, சியாச்சின் மற்றும் அதன் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் நிலவி வருகிறது. இது தவிர இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது நிலவும் எல்லை தகராறு, ஊடுருவல் போன்ற காரணங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் படிக்க | கடந்த வாரம் துரோகி! இந்த வாரம் நண்பேண்டா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய இந்தியா
ஆசியாவில் தற்போது சீனாவுக்கு இந்தியா மிகப்பெரிய சவாலாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஜப்பான் நிச்சயமாக முன்னால் உள்ளது, ஆனால் இந்தியாவின் முன்னேறும் வேகம், உலகம் மிகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சீனாவின் முன்னுரிமை ஒவ்வொரு முனையிலும் இந்தியாவை நிறுத்துவதாகும்.
முழு ஆசியாவிற்கும் வலிமையைக் காட்ட ஆசைப்படும் சீனா
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவுடன் ராணுவத் தகறாரில் ஈடுபட்டால், முழு ஆசியாவிற்கும் தனது வலிமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று சீனா நம்புகிறது. அதே சமயம், இந்தியாவுக்கு அமெரிக்கா நண்பன் என்றாலும், போர் ஏற்பட்டால் இந்தியாவை அமெரிக்கா நேரடியாக ஆதரிக்காது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா-சீனாவின் உறவில், இன்னும் ஒரு மாதத்தில் உதிக்கவிருக்கும் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சீனாவில் அதிபருக்கு எதிராக உச்சத்தை எட்டும் ஆர்ப்பாட்டங்கள்! மக்களை அடக்கும் போலீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ