தென் கொரியாவில் கொரோனாவைத் தவிர, மற்றொரு நெருக்கடியும் உள்ளது.2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. இது இந்த நாட்டின் கவலைகளை அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் கொரியா ஏற்கனவே உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடு. 2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு தென் கொரியாவில் (South Korea) இறப்பு எண்ணிக்கை 3,07,764. இதனால், தென் கொரியா உள்துறை அமைச்சகம் தனது கொள்கைகளில் 'அடிப்படை மாற்றங்கள்' செய்வது பற்றி ஆலோசனை செய்து  வருகிறது. 


குறைந்து வரும் மக்கள் தொகை நாட்டிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வயதானவர்களின் மக்கள்தொகை காரணமாக சுகாதார சேவைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு (Pension) அதிக அளவில் செலவழித்து வரும் நிலையில், இளைஞர்களின் மக்கள் தொகை குறைந்து வருவதால் நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றன.


ALSO READ | கடலுக்குள் புதைந்து போன உலகின் 5 மர்ம நகரங்கள்...!!


கடந்த மாதம், அதிபர் மூன் ஜே-இன்  (Moon Jae-in) குறைந்த பிறப்பு விகிதம் பிரச்சனையை சமாளிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதில், குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு  பண உதவி கொடுப்பது போன்ற முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், 2022 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காக, அதன் பெற்றோருக்கு 20 லட்சம் வான் (தென் கொரிய நாணயம்)  வழங்கப்படும். கூடுதலாக, ஒரு வயது வரை, மாதத்திற்கு மூன்று லட்சம் வான் வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு முதல், இந்த தொகை வென்ற ஐந்து லட்சமாக உயர்த்தப்படும்.


மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன


தென் கொரியாவில், வேலை மற்றும் குடும்பம் ஆகியவை தொடர்பான பிற தேவைகளை ஈடுகட்ட பெண்கள் பெரிய அளவில் போராடுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள், தொழிலில் முதலில் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள், குழந்தை பிறப்பு என்றால் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். அது தனது வேலையை பாதிக்கும் என நினைக்கிறார்கள்.


உயரும் ரியல் எஸ்டேட் விலைகளும் ஒரு முக்கியமான பிரச்சினை. சொத்து விலைகள் உயர்ந்து வருவதால், இளம் தம்பதிகள் குடும்பங்களை வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளின் கல்வி மற்றும் பிற விஷயங்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில், குழந்தை எதற்கு என நினைக்க தொடங்கி விட்டனர்.


ALSO READ | COVAXIN: 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR