கடலுக்குள் புதைந்து போன உலகின் 5 மர்ம நகரங்கள்...!!

கடலில் புதைந்த தனுஷ்கோடியை பற்றி அனைவருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும். அதேபோல், கடலில் புதைந்த உலகின் ஐந்து மர்ம நகரங்கள் உள்ளன. அதை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

கடலில் புதைந்த தனுஷ்கோடியை பற்றி அனைவருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும். அதேபோல், கடலில் புதைந்த உலகின் ஐந்து மர்ம நகரங்கள் உள்ளன. அதை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

1 /6

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகில் இருந்த சில நகரங்கள், தற்போது வரலாற்றுக் கதையாக மாறிவிட்டன. இந்த நகரங்கள் இப்போது கடலின் ஆழத்தில் புதைந்துள்ளன. கடலின் ஆழத்தை போல் மர்மமான சில நகரங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

2 /6

Lost City of Khambhat என்று இது அழைக்கப்படுகிறது, இது 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள கம்பாட் வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில், நிபுணர்கள் அதைக் கண்டுபிடித்தனர். இருப்பினும், அது எப்படி மூழ்கியது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.

3 /6

இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் புதைந்து போன பண்டைய நகரமான எகிப்து நாட்டின் ஹெராஸ்லோயின் ஆகும். இது சில வருடங்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் செல்வ செழிப்பிற்கு பிரபலமானது என்றும், இந்த கடலில் முத்து குளிப்பவர்க்கு இன்றும் இங்கிருந்து புதையல் கிடைத்துள்ளது என வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் கூறுகிறார்.

4 /6

இது எகிப்தில் இருந்த அலெக்சாண்டரின் அலெக்சாண்டிரியா நகரம். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கடும் நிலநடுக்கத்தால் கடலில் மூழ்கியது. இந்த நகரத்தின் பாரம்பரியத்தை சொல்லும் வகையில் அதன் இடிபாடுகள் இன்னும் கடலுக்கடியில் உள்ளன.

5 /6

சீனாவின் ஜெஜியாங்கில் ஜி செங் என்ற நகரம் இருந்தது. இது சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. ஆனால் 1959 ஆம் ஆண்டில் நகரம் ஆழமான ஏரியில் மூழ்கியது. இது 'லயன் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த நகரத்தின் இடிபாடுகள் இன்னும் நீரின் கீழ் சரியான நிலையில் உள்ளன.

6 /6

எகிப்தில் நீங்கள் பல பிரமிடுகளைப் பார்த்திருக்க கூடும், ஆனால் நீங்கள் எப்போதாவது கடலுக்குள் பிரமிடுகளைப் பார்த்திருக்கிறீர்களா. உண்மையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஒரு சுற்றுலா வழிகாட்டி இந்த பிரமிடுகளை கடலுக்குள் கண்டுபிடித்தார். இது யோனகுனி நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் ஒரு காலத்தில் புராணக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறப்படுகிறது.