ரியோ டி ஜெனிரோ, பிரேசில்: கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியா அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், 50 லட்சம் கோவிட் -19 தடுப்பூசி வாங்க இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரேசிலின் தனியார் சுகாதார கிளினிக்குகளின் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரேசிலிய தடுப்பூசி கிளினிக்குகள் சங்கம் (ABCVAC) தனது இணையதளத்தில், கோவாக்சின் (Covaxin) தடுப்பூசியை வாங்க இந்திய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தியது. இந்த தடுப்பூசி தற்போது மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது.
எனினும் பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். இது கட்டுபாட்டு அமைப்பு புதிய கொரோனா வைரஸுக்கு (Corona Virus) எதிரான எந்தவொரு தடுப்பூசியையும் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
பிரேசிலில் தடுப்பூசி தொடர்பாக இன்னும் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அரசாங்கம் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. அமெரிக்காவிற்குப் பிறகு, தொற்றுநோய் காரணமாக அதிக அளவில் இறப்பு ஏற்பட்ட இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
பாரத பயோடெக் (Bharat Biotech) உடனான தான் திட்டமிட்ட ஒப்பந்தத்தை விவரித்த ABCVAC, அரசு, சுகாதார ஊழியர்கள் மற்றும் முதையவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், பிற பிரிவில் வரும் பிரேசிலியர்கள் தனியார் சுகாதார அமைப்பின் மூலம் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்பதற்காக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
"நாங்கள் தனியார் சந்தையில் தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம், இந்திய தடுப்பூசி மிகவும் நம்பிக்கை அளிப்பதால், இதை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளோம் " என்று ஏபிசிவிஏசி (ABCVAC)தலைவர் ஜெரால்டோ பார்போசா தொலைக்காட்சி நெட்வொர்க்கான குளோபோ நியூஸிடம் தெரிவித்தார்.
"இது கூடுதலாக வாங்கும் தடுப்பூசி, இதனால், அரசாங்கம் வாங்குவதாக திட்டமிட்டுள்ள தடுப்பூசி அளவில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என அவர் மேலும் கூறினார்.
பாரத் பயோடெக் மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியா (India) நேற்று ஒப்புதல் அளித்தது.
ALSO READ | COVAXIN - COVISHIELD: செயல்திறன், விலை பிற விபரங்கள்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR