கோமாவில் வட கொரிய அதிபர் கிம், சகோதரிக்கு அதிகாரம்: தென் கொரிய அதிகாரியின் பகீர் தகவல்!!
தென் கொரியாவின் மறைந்த அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர், கிம் ஜாங் உன் கோமாவில் உள்ளார் என்றும், அதனால்தான் அவரது சகோதரிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
புதுடெல்லி: வட கொரியாவின் (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய வினோத செய்திகளும் அவரது உடல் நிலை குறித்த புரளிகளும் அவ்வப்போது தலைதூக்குவது சமீப காலங்களில் வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவின் (South Korea) மறைந்த அதிபர் கிம் டே-ஜங்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர், கிம் ஜாங் உன் (Kim Jong Un) கோமாவில் உள்ளார் என்றும், அதனால்தான் அவரது சகோதரிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஒரு சமூக ஊடக இடுகையில், சேங் சாங்-மின் (Chang Song Min), எந்தவொரு வட கொரியத் தலைவரும், தான் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது ஆட்சி மாற்றத்தின் மூலம் அகற்றப்பட்டாலோதான் தனது அதிகாரத்தை வேறொரு நபரிடம் ஒப்படைப்பார். அப்படி இல்லாமல், இப்படி யாரும் அதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
கிம் ஜாங்-உன் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறார் என்றும் அவரால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றும் அவர் தனது முந்தைய கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.
கிம் உடல்நலக்குறைவு குறித்த வதந்திகளை முறியடிக்கும் முயற்சியில், சமீபத்திய மாதங்களில் வட கொரியா வெளியிட்ட கிம் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
"அவர் கோமா நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர் இன்னும் இறக்கவில்லை. ஒரு முழுமையான அடுத்தடுத்த ஆட்சி கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. எனவே வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு அப்படியே வைத்திருக்க முடியாது என்பதால், கிம் யோ-ஜாங் (Kim Yo-Jong) முன்னிலைக்கு கொண்டு வரப்படுகிறார்” என்று சேங் கூறினார்.
கிம் சமீபத்தில் நாட்டின் பொருளாதார நிலைமையை மறுபரிசீலனை செய்ததாகவும், COVID-19 உருவாக்கியுள்ள கடுமையான சவால்களை ஒப்புக் கொண்டதாகவும் வட கொரிய ஊடகங்கள் தெரிவித்தன. உணவுப் பற்றாக்குறையிலிருந்து நாட்டை காப்பாற்ற கிம் வட கொரிய குடிமக்களை தங்கள் செல்ல நாய்களை தருமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது
கிம் ஜாங் உன்னின் மனைவியின் பெயர் ரி சோல் ஜூ என்று கூறப்படுகிறது. சர்வாதிகாரி கிம் ஜாங் உன் திருமணம் செய்து கொண்டதாக 2012 ல் வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2008 ஆம் ஆண்டில் கிம் ஜாங் உன்னின் தந்தை மாரடைப்பால் காலமான பிறகு, 2009 ல் அவசரமாக திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், கிம் ஜாங் தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது. கொடுங்கோலன் கிம்மிற்கு இன்னும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், பொது வெளியில் அவர்கள் வந்ததில்லை.
வட கொரொயாவைப் பொறுத்த வரை அங்கு நடப்பது யாருக்கும் தெரிவதில்லை. கிம் ஜாங் உன் என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது அதை விட ரகசியமாக வைக்கப்படுகிறது. இந்நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த சேங் தற்போது கூறியுள்ளவை உண்மையா இல்லையா என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.