இலங்கையில் புர்கா, மதரஸாக்களுக்கு தடை விதிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புர்கா அணிவதற்கும், மதரஸாக்களுக்கும், மதரீதியாக அரசியல்கட்சிகளைப் பதிவு செய்யவும் தடை விதிக்கக் கோரி இலங்கை (Srilanka) அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.


பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், பயங்கரவாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது,  தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து  புர்கா (Burqa) அணிவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சர்வதேச மனித உரிமை குழுக்கள் சர்ச்சை எழுப்பியதை அடுத்து தடை நீக்கப்பட்டது


ALSO READ | சீனாவில் இலங்கை தேசிய கொடி வடிவமைப்பில் மிதியடி; கடுப்பில் உள்ள இலங்கை 


நாடாளுமன்ற குழு சமர்பித்துள்ள அறிக்கையில், உலகில் ஏராளமான நாடுகள் புர்காவை தடை செய்துள்ளன. எனவே, உள்நாட்டு பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பெண்கள் புர்கா அணிவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


பொதுவெளியில் புர்கா அணிந்து செல்பவர்கள் செல்லும் போது, அவர்கள் முகத்தில் உள்ள துணியை அகற்றி அடையாளத்தைக் உறுதி செய்து கொள்ள போலீஸாருக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மத ரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


மேலும், மதரஸாக்களில் படித்து வரும் மாணவர்கள் அனைவரையும் 3 ஆண்டுகளுக்குள், அனைவரும் படிக்கும் பொதுவான பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | QUAD Summit 2021: அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR