இலங்கை: ராஜபக்சேவின் மகன் நாமல் மீண்டும் கைது!
கொழும்பில் உள்ள தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம், ஹேலோகோப் என்னும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் நாமல் ராஜபக்சே பெரும் நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கை மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் பங்குகளை வாங்கியது தொடர்பாக அவர் காவல்துறையின் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேரில் ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே நாமல் ராஜபக்சே இந்த நிதிமோசடி புகாரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.