நியூடெல்லி: சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்படுவதால், இலங்கையில் பொருளாதார சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புத்தாண்டில் ஓரளவு நிலைமை சரியாகிவிடும் என அந்நாடு கணித்திருந்த நிலையில், இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவலையளிப்பதாக, இலங்கையின் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்‌ச தெரிவித்தது அந்நாட்டின் மக்களின் நிலைமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு காரணம், அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.


அம்பாந்தோட்டை துறைமுகம் 9,500 கோடி ரூபாய் சீன முதலீட்டில் கட்டப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய கட்டமைப்பாகும். இந்தத் துறைமுகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கான கடன்களை இலங்கை செலுத்தத் தவறியதால், வேறு வழியின்றி 2017-ம் ஆண்டு முதல்  99 ஆண்டு குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!


சீனாவுடன் இலங்கை செய்து கொண்ட இந்த உடன்படிக்கையின் பிறகே, உலக நாடுகள் பலவும் இலங்கையுடனான நட்புறவில் இருந்து விலகியதாகவும், அதன் எதிரொலியே, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்படக் காரணம் என இலங்கையின் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்‌ச தெரிவித்தார்.


மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு பிறகே, இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கையுடனான உறவில் இருந்து விலகியதால், இலங்கை தனிமைப்பட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், தான் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 


சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் கிடைத்தாலும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை ஒப்புக் கொண்ட கலாநிதி விஜயதாஸ ராஜபக்‌ச, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதுடன், உலகின் பிற நாடுகளின் நம்பிக்கையைப் பெறுவதும் நாட்டிற்கு அவசியம் என்று வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்! 
 
ஜப்பானுடன் செய்து கொண்ட இலகு ரயில் ஒப்பந்தத்தை, எந்தவித ஆய்வும் இன்றி ரத்துச் செய்த, அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தவறை சுட்டிக் காட்டிய கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச, இலங்கையின் இதுபோன்ற பல செயல்களால், பல நாடுகள் அதிருப்தியில் இருப்பதாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.


தற்போது, சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெற்று, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த இலங்கையின் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்‌ச, இரண்டு மாதங்களுக்குள் கடன் கிடைத்துவிடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ