Video: 29ஆவது மாடியில் மலைப்பாம்பு... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
Python Video: 29ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம் மறைந்திருந்த மலைப்பாம்பை பாம்பு மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்ட நிலையில், அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Python Video: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரின் லிபர்ட்டி ஹூமேன் சொசைட்டி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே, மலைப்பாம்பு ஒன்றை பாாம்பு மீட்பவர்கள் மீட்டுள்ளனர். அந்த பாம்பு, பைபால்ட் பால் மலைப்பாம்பு என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம், அந்த மலைப்பாம்பு மறைந்திருந்துள்ளது.
மலைபாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம் உடனடியாக பாம்பை மீட்பு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த மீட்பு பணியாளர்கள் பாம்பை மீட்டு, விலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த பாம்பு, பைபால்ட் பால் பைத்தான் (piebald ball python) என்பது பைட் பால் பைத்தான் (pieball python) என்றும் அழைக்கப்படுகிறது. அவை பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. பெரிய வெள்ளைத் திட்டுகள் மற்றும் தோலின் கோடுகள் நிறமற்ற வகையிலும் இருக்கும்.
29ஆவது மாடியில்...
மீட்கப்பட்ட அந்த பாம்பு குறித்து, பாம்பை மீட்டவர்கள் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த பாம்பை "Banana" (வாழைப்பழம்) என்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும், இந்த பாம்பு குறித்து பல்வேறு தகவல்களை வீடியோவில் பகிர்ந்த அவர்கள், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 29ஆவது மாடியில் இருந்துதான் பாம்பு மீட்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | சிலந்தி வலையில் சிக்கிய சின்னாபின்னமான பாம்பு: வைரல் வீடியோ
அந்த வீடியோவில்," Banana, மிக அழகான பைபால்ட் பால் பைத்தான் வகை பாம்பு. இது ஆபத்தானது இல்லை. ஆனால், சிலருக்கு திடீரென பாம்பை பார்த்தால் பயம் வரும்தானே. Banana தற்போது இங்கு வந்துள்ளது. இது, குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டின் ஃபிரிட்ஜ்க்கு பின் ஒளிந்திருந்தது. அவர்கள் பதறியடித்து, எங்களை அழைத்தார்கள். இது, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 29ஆவது மாடியில் இருந்து மீட்கப்பட்டது என்பதை நாங்கள் உங்களிடம் கூறினோமா?" என குறிப்பிட்டுள்ளனர்.