சிலந்தி வலையில் சிக்கிய சின்னாபின்னமான பாம்பு: வைரல் வீடியோ

Viral Video: சிலந்தி வலையில் பாம்பு ஒன்று சிக்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த சிலந்தி வேகமாக வந்து பாம்பை என்ன செய்கிறது என்பதை வீடியோவில் நாம் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 7, 2023, 04:59 PM IST
  • சிலந்தி வலையில் பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
சிலந்தி வலையில் சிக்கிய சின்னாபின்னமான பாம்பு: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சிலந்திகள் காடுகளிலும் மனித வீடுகளிலும் அதிகம் காணப்படுகின்றன. வலை பின்னுவதில் நிபுணத்துவம் பெற்ற சிலந்திகள் தங்கள் இரையை வலையில் சிக்க வைத்து கொன்று விடுகின்றன. பொதுவாக, மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் வாழும் சிலந்திகள் ஈக்கள் மற்றும் சிறிய பூச்சிகளை இரையாக ஆக்குகின்றன. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ தான் வெளிவந்துள்ளது, அதில் ஒரு சிலந்தி வலையில் சிக்கிய ஆபத்தான பாம்பை கண்டு பயனர்கள் திகைத்தனர்.

பொதுவாக சிறு பூச்சிகள் மற்றும் புழுக்கள் பிடிக்கும் சிலந்தி வலையில் ஆபத்தான பாம்பு சிக்கியிருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், சிலந்தி வலையில் பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதை நாம் காண முடிகிறது. இதன் போது, ​​பாம்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேதனையில் துடிக்கிறது, அப்போது சிலந்தி பயமின்றி பாம்பை வேட்டையாடுவதை நாம் வீடியோவில் காணலாம். அந்த வீடியோவைப் பார்த்த பயனாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இவ்ளோ பெரிய பாம்பை தம்மாதுண்டு சிலந்தி பதம் பார்த்துவிட்டதா என்று பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | குரங்கு கையால் ஆப்பிள் சாப்பிடும் ஆமை: நெகிழவைக்கும் வைரல் வீடியோ

சிலந்தி வலையில் சிக்கிய பாம்பு
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் technology_world_24 என்ற பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீட்டின் ஸ்டோர் அறையில் செய்யப்பட்ட அடர்ந்த சிலந்தி வலையில் பாம்பு ஒன்று சிக்கியிருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. எங்கே ஒருபுறம் பாம்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. அதே நேரத்தில், பாம்பை இரையாக மாற்ற சிலந்தியும் முயற்சிக்கிறது. 

இந்த வீடியோ 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது
இந்த வீடியோவில் சிலந்தி ஆபத்தான பாம்பின் அருகே வந்து பயப்படாமல் பாம்பின் வாயை வலையில் போட்டு கொன்றுவிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ இதுவரை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் 2.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில், வீடியோவைப் பார்க்கும்போது, ​​பயனர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து சிலந்தியை ஸ்பைடர்மேன் என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களை தெறிக்க விட்ட நீர்யானை! ஆளை விடு என தலைதெறிக்க ஓடும் சிங்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News