புதுடெல்லி: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை பார்த்திராத சூரிய ஒளிவட்டத்தை நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் படம் பிடித்துள்ளது. இந்த படத்தில், செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தின் மேற்பரப்பில் சூரிய ஒளிவட்டத்தைக் காணலாம். மேல் நிலையில் இருக்கும் மேகங்களில் காணப்படும் பனி படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது, ஒளியின் சிதறல் காரணமாக தோன்றும் 22 டிகிரி வளையமான சூரிய ஒளிவட்டத்தை ​​சன் ஹாலோ என்று சொல்கிறோம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை கண்டிராத சூரிய ஒளிவட்டத்தின் புகைப்படத்தை எடுத்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தனித்துவமான அம்சம் பூமிக்கு மேல் வானத்தில் மீண்டும் மீண்டும் காணப்பட்டாலும், அது சிவப்பு கிரகம் என்று சொல்லப்படும் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவதில்லை. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் சிக்கலான தன்மைகள் குறித்து விஞ்ஞானிகளுக்கு ஒரு அரிய பார்வையை அளிக்கும் பெர்செவரன்ஸ் ரோவரின் புதிய புகைப்படம் இது.


மேலும் படிக்க | அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு


கடந்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் நிகழும் தனித்துவமான வளர்ச்சியை பெர்செவரன்ஸ் ரோவர் எடுத்தது. இந்த நிகழ்வை "ஆச்சரியமானது" என்று கிரக விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.  


"ஒளிவட்டம் என்பது சூரியன் அல்லது சந்திரனில் இருந்து 22 டிகிரி ஒளி வளையமாகும், மேலும் இது அறுகோண பனி படிகங்களால் கவனிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மிகவும் பொதுவான வகை ஒளிவட்டமாகும்" என்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


செவ்வாய் கிரகத்துடன் ஒப்பிடுகையில், பூமியில் தண்ணீரை விட கார்பன் டை ஆக்சைட்டின் உள்ளடக்கம் குறைவாக உள்ளது என்று கூறும் விஞ்ஞானிகள், படத்தில் வளையம் உருவாக வழிவகுத்தது தூசி அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?


"வானத்தில் உள்ள தூசியிலிருந்து நீங்கள் என்ன வகையான அம்சங்களைப் பெறுகிறீர்கள் என்பதைக் காட்டும் பல படங்கள் எங்களிடம் உள்ளன, அதிலிருந்து ஒருபோதும் ஒளிவட்டத்தைப் பெறுவதில்லை என்பது உறுதியாகத் தெரியும்" என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


செவ்வாய் கிரகத்தின் கடந்தகால வாழ்விடத்தை ஆராய்வதற்கான நாசாவின் முயற்சியை முன்னெடுப்பதற்காக, பழங்கால நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைக் கண்டறிய 2020 ஆம் ஆண்டில் பெர்செவரன்ஸ் ரோவர் விண்ணில் ஏவப்பட்டது.


மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ