கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்
கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்களை இரான் கைப்பற்றியது. பாரசீக வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்...
கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்கள் மற்றும் அதன் பணியாளர்களை இரான் கைப்பற்றியது. இரான் கைப்பற்றிய இரண்டு கப்பல்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கிரீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரானின் இந்த செயல்கள் இருதரப்பு உறவுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கிரேக்க நாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிரீஸ் மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகள் மோசமடைவதற்கான செயல் இது என்று சர்வதேச அளவில் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்
பாரசீக வளைகுடாவில் ஈரானின் துணை ராணுவப் புரட்சிக் காவலர் படை (Iran's paramilitary Revolutionary Guard), நேற்று (2022 மே 27, வெள்ளிக்கிழமை) இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்களை கைப்பற்றியக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அண்மையில் மத்தியதரைக் கடலில் பொருளாதாரத் தடைகளை மீறியதாகக் கூறப்படும் ஈரானிய எண்ணெய் கப்பலை கிரீஸ் கைப்பற்றியது. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் கிரீஸ் இதனை செய்தது.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது பதற்றங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
மேலும் படிக்க | வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை
ஈரானின் துணை ராணுவப் புரட்சிக் காவலர் படை (Iran's paramilitary Revolutionary Guard), தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயர் குறிப்பிடப்படாத டேங்கர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் 'கிரேக்கக் கொடி ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்களை கையகப்படுத்தியது' குறித்து ஏதென்ஸில் உள்ள ஈரான் தூதரிடம், கிரேக்க வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
"இந்த செயல்கள் கடற்கொள்ளையர்களின் செயல்களுக்கு சமமானவை" என்று கிரேக்க அமைச்சகத்தின் தரப்பில் கடுமையாக கூறப்பட்டது.
மேலும் படிக்க | தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தை: வடகொரியா
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று வெளியான கிரேக்க நாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஈரான் கடற்கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இருந்த கிரேக்கக் கொடியுடன் கூடிய ‘டெல்டா போஸிடான்’ கப்பலின் மீது ஈரானிய ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
"ஆயுதமேந்தியவர்கள் பின்னர் குழுவினரை சிறைபிடித்தனர்," என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
"ஈரான் கடற்கரைக்கு அருகில், ஏழு கிரேக்க குடிமக்களை ஏற்றிச் சென்ற மற்றொரு கிரேக்கக் கொடியிடப்பட்ட கப்பலில் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது" என்று அமைச்சகம் கூறியது. இரண்டாவது கப்பல் ப்ரூடென்ட் வாரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கப்பலின் உரிமையாளரான கிரீஸில் உள்ள Polembros Shipping இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. "அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, நிலைமையை திறம்பட சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று கைப்பற்றப்ப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe