பெஷாவர்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) யைச் சேர்ந்த தற்கொலை தாக்குதல் ப்டையை சேர்ந்த ஒருவர் வியாழக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து 9 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். இந்த தகவலை ராணுவம் தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் கான்வாய் மீது பைக்கில் வந்த தற்கொலை குண்டுதாரி ஒருவர் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரீக் -இ - தலிபான் பாகிஸ்தான் TTP


ஊடகத்தில் வெளியான செய்தி அறிக்கையில், தாக்குதல் நடத்தியவர் தனது பைக்கை கான்வாயில் இருந்த படைகளின் வாகனங்கள் மீது மோதியதில் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என கூறப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட TTP இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு காவல் துறை அதிகாரிகள் உடனடியாக குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்தனர். மேலும், முழு பகுதியையும் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தீவிரவாதிகளை எச்சரித்த ஜெனரல் அசிம் முனீர்


ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் அன்வருல் ஹக் கக்கர், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்)  தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை என்று கூறிய அவர், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் இருப்பதாகவும் கூறினார். ஆகஸ்டில், ஜெனரல் அசிம் முனீர் கூறுகையில், சமீபகாலமாக அதிகரித்துள்ள பயங்கரவாதம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியை பயனற்றதாக ஆக்கியுள்ளது. தீவிரவாதிகள் பாகிஸ்தானிடம் சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க | BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி... கைவிட்ட சீனா, ரஷ்யா!


தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள்


பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. திங்களன்று, ஒரு மொபைல் வேன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காவல் துறையை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தானில் பயங்கரவாதிகள் சீன குடிமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. சீன பொறியாளர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, ​​பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வாகனம் புல்லட் புரூப் ஆக இருந்த காரணத்தினால், அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. 


பலுசிஸ்தானில் சீனாவை சேர்ந்தவர்கள் மீது அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள்


சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (CPEC) சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை குறி வைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.


கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மனித குண்டு வெடிப்பு


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் நடந்த மனித குண்டு வெடிப்பில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 111 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜாரின் கர் தெஹ்சிலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர்கள் மாநாட்டைக் குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.


மேலும் படிக்க | Worlds biggest cemetery: அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்! உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ