கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றி: அடுத்த கட்டத்திற்கு நகரும் Oxford Coronavirus Vaccine
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 அல்லது AZD1222 எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை வெளிப்படுத்தியது
Oxford Coronavirus Vaccine: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டம் I / II மனித சோதனைகளில் நம்பகத்தன்மையை காட்டியுள்ளது. தி லான்செட் வெளியிடப்பட்ட ஆய்வின் சக மதிப்பாய்வு முடிவுகளின்படி, ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ChAdOx1 nCoV-19 சோதனையின் போது "ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான நம்பகத்தன்மையை" காட்டியது, மேலும் ஒரே மாதிரியான உடலுக்கு ஊக்கமளிக்கும் ஆன்டிபாடிகள் அதிகரித்தது" என்று தனது பத்திரிக்கையில் கூறியுள்ளது.
இதன் பொருள் ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona vaccine) பாதுகாப்பானது மற்றும் ஆரம்ப சோதனைகளில் வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியது என்று கூறப்பட்டு உள்ளது. ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட முடிவுகளில் "சோதனை செய்யப்பட்ட பலருக்கு இந்த தடுப்பூசி, அவர்களின் உடலை ஆதரித்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பத்திரிகையான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கட்டம் I / II சோதனைகளின் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டன.
ALSO READ | நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்
ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்த லான்செட் கட்டுரையை ட்வீட் செய்து, மதிப்புமிக்க பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன், முடிவுகள் "மிகவும் ஊக்கமளிக்கும்" என்றார். "கட்டம் 1/2 ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி சோதனை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசி பாதுகாப்பானது, அனைவருக்கும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது" என்று ஹார்டன் கூறினார்.
ஆக்ஸ்போர்டு கொரோனாவைரஸ் தடுப்பூசி தனது உறுதியை காட்டுகிறது:
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில், ChAdOx1 nCoV-19 அல்லது AZD1222, எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை வெளிப்படுத்தியது. இதனால் எங்கள் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு மக்களைப் பாதுகாக்கும்" என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறினார்.
ALSO READ | இறுதி சோதனை கட்டத்தில் கோவிட் -19 தடுப்பூசி; விரைவில் அறிமுகம்: ஆக்ஸ்போடு குழு
இருப்பினும், மேலும் ஆராய்ச்சி தேவை என்று பொல்லார்ட் குறிப்பிட்டார். "இருப்பினும், SARS-CoV-2 (COVID-19) நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி திறம்பட பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எங்களுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறினார்.
முறைப்படி ChAdOxI என அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இப்போது AZD1222 என அழைக்கப்படுகிறது, இது பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
ALSO READ | கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்