ஒரே நாளில் விடுதலை... ஆனால் ஆக. 14இல் சுதந்திர தினம் கொண்டாடும் பாகிஸ்தான் - அது ஏன்?
Independence Day 2023: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாளில் சுதந்திரம் பெற்ற நிலையில், ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விட ஒருநாள் முன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது குறித்து இதில் காணலாம்.
Independence Day 2023: இந்தியா தனது 77ஆவது சுதந்திர தினத்தை நாளை (ஆக. 14) கொண்டாட உள்ளது, பாகிஸ்தான் இன்று அதன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இரு நாடுகளின் சுதந்திரம் பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் உண்மையில் 1947ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்பதை ஒரு கணம் நினைவு கூர்வது இங்கு அவசியமாகும்.
இந்திய சுதந்திர சட்டம் கையெழுத்தானது, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று. இதுவே இரு நாடுகளின் தோற்றத்திற்கும் வழிவகுத்தது. இருப்பினும், இரு நாடுகளின் சுதந்திரத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆக இருக்கிறது. அப்படி என்றால், இரு நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தானே சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். இந்த நிலையில், பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது, ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது சிலருக்கு ஒரு புதிராகவே உள்ளது.
இந்திய சுதந்திரச் சட்டத்தின்படி, '1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்தியாவில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் என அறியப்படும் இரண்டு சுதந்திர டொமினியன்கள் (நாடுகள்) நிறுவப்படும்' என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் நிறுவனர் என அறியப்படும் முகமது அலி ஜின்னா தனது வானொலி உரையில் ஆகஸ்ட் 15ஆம் தேதியை பாகிஸ்தானின் சுதந்திர தினமாக அறிவித்தார். அப்போது அவர், 'சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட பாகிஸ்தானின் பிறந்த நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆகும். தாய்நாட்டைப் பெறுவதற்காக கடந்த சில வருடங்களில் பெரும் தியாகங்களைச் செய்த இஸ்லாமிய தேசத்தின் தலைவிதி நிறைவேறியதன் அடையாளச் சின்னமாகும்' என பேசியிருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த அதே இரவில் தான் பாகிஸ்தானும் உருவானது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பிறகு ஏன் நமது அண்டை நாடான பாகிஸ்தான், சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கொண்டாடுகிறது? பல ஆண்டுகளாக, இந்த கேள்விக்கு பதிலளிக்க பல கோட்பாடுகள் தோன்றியுள்ளன.
ஒரு யோசனை அதை இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மற்றும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான லார்ட் மவுண்ட்பேட்டனுடன் தொடர்புடையது. முதலில், அதிகாரப் பரிமாற்றம் 1948க்கு ஜூன் மாதம் முன் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக அறிவிக்க மவுண்ட்பேட்டன் பிரபுவின் முடிவு செயல்முறையை துரிதப்படுத்தியது. பாகிஸ்தானின் ஆட்சியை முகமது அலி ஜின்னாவிடம் ஒப்படைக்க 1947இல் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கராச்சிக்கு சென்றார்.
இந்த முடிவின் பெருமை அமைச்சரவைக் கூட்டத்திற்கே சேரும் என்பது மற்றொரு கருத்து. உண்மையில் ஜூன் 1948இல், பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை இந்தியாவிற்கு முன்பாக கொண்டாட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஜின்னா இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டார் மற்றும் அந்த தேதி ஆகஸ்ட் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டது.
ரமலான் மாதமும் ஒரு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த கருத்தை ஆதரிக்கும் சிலர், 1947ஆம் தேதி ஆகஸ்ட் 14 மற்றும் 15க்கு இடைப்பட்ட இரவு, புனித மாதத்திற்குள் புனித நாளாகக் கருதப்படும் ரமலானின் 27ஆவது நாளுடன் ஒத்துப்போகிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர். அதனால்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இரண்டாவது காரணம், நேர வித்தியாசம். இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST) பாகிஸ்தான் நேரப்படி (PST) 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று 00:00 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதால், பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணி, அதன் காரணமாக ஒரு நாள் முன்னதாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ