90 நாட்களுக்குள் காலி செய்யலைன்னா ரத்த ஆறு ஓடும்... சீனாவை எச்சரிக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள்!

பலுசிஸ்தானின் குவாடாரில் சீன குடிமக்கள் மீது பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2023, 12:34 PM IST
  • பலுசிஸ்தானை சீனா ஆக்கிரமித்துள்ளதாக BLA கூறியுள்ளது
  • CPEC போன்ற திட்டங்களை செயல்படுத்த பலுசிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • சீனா வெளியேறவில்லை என்றால், மேலும் தாக்குதல் நடத்தப்படும் என்று BLA கூறியுள்ளது.
90 நாட்களுக்குள் காலி செய்யலைன்னா ரத்த ஆறு ஓடும்... சீனாவை எச்சரிக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள்! title=

குவாதார்: பாகிஸ்தானுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கும் பலுசிஸ்தானில் உள்ள குவாடாரிடமிருந்து சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி கிடைத்தது. பலூச் விடுதலை இராணுவம் (BLA) சீன பொறியாளர்களின் வாகனத் தொடரணியைத் தாக்கியது. இது தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் நான்கு சீன பிரஜைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BLA இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் Zir Pahjag' என்று பெயரிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குப் பிறகு, பலூச் விடுதலை இராணுவம் தனது பணியின் மூன்றாம் கட்டத்தை முடித்ததாக அறிவித்தது. இதனுடன், 90 நாட்களுக்குள் இங்கிருந்து வெளியேறுமாறு சீனாவுக்கு இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

பலுசிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல்

பலுசிஸ்தானில் உள்ள குவாதர் ஒரு துறைமுக நகரம் மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) பல திட்டங்கள் இங்கு நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்களில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். BLA செய்தித் தொடர்பாளர் ஜியாந்த் பலூச் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து குவாதர் துறைமுகத்திற்குச் சென்ற சீனப் பொறியாளர்களின் கான்வாய் மீது,  கிளிர்ச்சி படை குழு குறி வைத்து தாக்கியது. காலை 9.18 மணியளவில் BLA தாக்குதல் நடத்தியது. குறிவைக்கப்பட்ட வாகனத் தொடரணியில் பல வாகனங்கள் இருந்தன. சீன பொறியாளர்கள்  அதில் இருந்தனர், அவர்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ராணுவம், போலீஸ், ஏடிஎஃப் மற்றும் கவச வாகனம் ஆகியவற்றின் பாதுகாப்பின் கீழ் பொறியாளர்கள் நடந்து கொண்டிருந்தனர்.

30 நிமிடங்களுக்கு குண்டுகள் மழை பொழிந்தன

BLA இது குறித்து கூறுகையில், தலைவர் இஷாக் சவுக்கின் நீதித்துறை வளாகத்திற்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் BLA கிளர்ச்சியாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் சீன பொறியாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் வாகனத் தொடரணியை நிறுத்த கைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, தாக்குதலில் நான்கு சீன குடிமக்கள் மற்றும் பதினொரு பாகிஸ்தானிய பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இதில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களான நவீத் பலோச் மற்றும் மக்பூல் பலோச் ஆகியோர் BLA ஆல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக வெடிமருந்துகள் தீரும் வரை வீரர்கள் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினர் என ஜியாந்த் பலோச் வர்ணித்துள்ளார். 

மேலும் படிக்க | நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை... இன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ராஜினாமா?

90 நாட்களில் பலுசிஸ்தானை காலி செய்யுமாறு எச்சரிக்கை

BLA ஒரு தெளிவான செய்தியை சீனாவிற்கும் கொடுத்துள்ளது. பலுசிஸ்தானை சீனா ஆக்கிரமித்துள்ளதாக BLA கூறியுள்ளது. மேலும், CPEC போன்ற திட்டங்கள் இங்கு நடத்தப்படுகின்றன, இதை பலூசிஸ்தான் எதிர்க்கிறது. BLA ஐ நம்புவதாக இருந்தால், பலுசிஸ்தானில் இருந்து விலகி இருக்குமாறு பலூச் கிளர்ச்சியாளர்கள் பலமுறை சீனாவைக் கேட்டுக் கொண்டனர்.  சீனா என்ன திட்டங்களை செய்தாலும் அது பலூச் குடிமக்களின் சுரண்டும் நடவடிக்கையாகவே இருக்கிறது என BLA குற்றம் சாட்டியுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரம் பெறும் வரை அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது என்று பலூச் விடுதலை ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனுடன், பலுசிஸ்தானில் இருந்து சீனா வெளியேற 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த நாட்களுக்குள் சீனா வெளியேறவில்லை என்றால், மேலும் தாக்குதல்களுக்கு தயாராக வேண்டும், என்றூம் பலுசிஸ்தானில் ரத்த ஆறு ஓடும் என்று BLA இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பலூசிஸ்தான் பாகிஸ்தானிற்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பிரதமர் பதவி ஒரு முள்கிரீடம்... இது வரை சிறை சென்ற பிரதமர்கள் பட்டியல் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News