அரசியல் சீர்திருத்தங்களைக் கோரும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோன் (Maha Vajiralongkorn) மற்றும் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) இருவரையும் குறிவைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பாங்காக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தபட்டம் 10,000 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். "போராட்டக்காரர்கள் அனைவரின் மீதும் வழக்குத் தொடரப்படும்" என்று பாங்காக் காவல்துறையின் துணைத் தலைவர் பியா தவிச்சாய் (Piya Tawichai) கூறினார். மேலும் "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்க நாங்கள் விரும்புகிறேன்: இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்" என்று எச்சரிக்கையும் விடுத்தார்.


ஆனால், மாணவர் அமைப்பின் தலைவர் ஜுதாதிப் சிரிகன் (Jutatip Sirikhan) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைவரையும் அழைத்திருப்பதால் போராட்டக்காரர்கள் திரும்ப முடிவு செய்துள்ளனர்.


அண்மையில், மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்த தாய்லாந்து அரசு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றாக சேரக்கூடாது என்று தடைவிதித்தது. அத்துடன் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து செய்திகள் வெளியிடுவது மற்றும் ஆன்லைனில் செய்திகளை வெளியிடுவதை தணிக்கை செய்தது.  


பாங்காங்கில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவின் அலுவலகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்களை கலகப் பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர்.


அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் நடைபெறுவதற்கு மத்தியில், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கும் பரித் சிவாரக் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் அர்னான் நம்பா ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய Panusaya, தொடர்ந்து போராடுமாறு மக்களை வலியுறுத்தினார். எனவே அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  


கைதிகளின் உரிமைகளை மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தாய்லாந்து அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை வியாழக்கிழமையன்று தாய்லாந்து போலீசார் கைது செய்த போதும் எமர்ஜென்சியை அமல்படுத்தும் ஆணையை நிறைவேற்ற அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாங்காக்கில் வீதிகளில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்தி | Pakistan ISI: இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் புதிய சதி அம்பலம்…


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR