எமிரேட்ஸ் போயிங் 777 மற்றும் இந்தியாவின் பெங்களூவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் ஆகிய விமானங்கள் சோமாலிலாந்தின் மீது பறக்கும் போது இரு விமானங்களும் மோதவிருந்தன. இறுதி நொடிகளில் விபத்து தவிர்க்கப்பட்டதாக சோமாலிலாந்து சிவில் ஏவியேஷன் மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி (The Somaliland Civil Aviation and Airports Authority (SCAAA)) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்து மோதவிருந்த எமிரேட்ஸ் விமானத்தால் ஏற்பட்ட பரபரப்பின் பின்னணியும், சில நொடிகளில் விபத்து தவிர்க்கப்பட்டு, மிகப் பெரிய சேதம் தடுக்கப்பட்டது தொடர்பான விஷயங்களும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. 


இதே வான்வெளியில் ஒரு மாதத்திற்கு முன்னதாக இரண்டு விமானங்கள் இதேபோன்ற சிக்கலை சந்தித்த பிறகு, மீண்டும் விபத்து நேரிடும் சூழல் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது சோமாலிலாந்து பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திறன் தொடர்பான கவலைகளை அதிகரித்தது.


EK722 என்ற எமிரேட்ஸ் விமானம் துபாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. எமிரேட்ஸ் டிரிபிள் செவன் நைரோபி ஜோமோ கென்யாட்டாவிலிருந்து (NBO) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) பறந்து கொண்டிருந்தது. இரண்டு நகரங்களுக்கு இடையே தினசரி இரண்டு விமானங்கள் வரை இந்த விமான நிறுவனம் இயக்குகிறது. மார்ச் 24 அன்று, EK722 விமானம் நைரோபியிலிருந்து 19:54 UTC க்கு புறப்பட்டு, துபாய்க்கு சென்றுக் கொண்டிருந்தது.


எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ET690, 737 MAX அடிஸ் அபாபா போலே சர்வதேச விமான நிலையத்திலிருந்து (ADD) பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு (BLR) பறந்து கொண்டிருந்தது. ET690 அடிஸ்ஸில் இருந்து 20:36 UTC க்கு புறப்பட்டு பெங்களூரில் வந்துக் கொண்டிருந்தது.  


மேலும் படிக்க | தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தாய்லாந்து பாராளுமன்றம்!


இந்த, இரண்டு விமானங்களும் 37,000 அடி உயரத்தில் பறக்கும் போது தோராயமாக 00:43 EAT (21:43 UTC) மணிக்கு ஒரே இடத்தை நோக்கி வந்தன.இரு விமான பைலட்களும், சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து முரண்பட்ட அறிவுறுத்தல்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.


SCAAA வெளியிட்ட அறிக்கையின்படி, இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இறுதி நிமிடங்களில் சோமாலிலாந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தலையிட்டு பேரழிவைத் தவிர்த்ததாக கூறப்படுகிறது.  எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் 39,000 அடிக்கு விமானத்தை உயர்த்தி, நிலைமையை சமாளித்தார்கள். 


இந்த ஆண்டு, சோமாலிய தீபகற்பத்தின் (Horn of Africa) மேல் பறக்கும் போது, விமானிகளுக்கு முரண்பட்ட அறிவுறுத்தல்கள் வருவதாக பல விமானிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.  


சோமாலிலாந்திற்கும் சோமாலியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான வான்வெளி கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த விபத்து முக்கியத்துவம் பெறுகிறது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத போதிலும், சோமாலிலாந்து தனது சொந்த வான்வெளியை தானே நிர்வகித்துக் கொள்வதாக கோரி வரும் நிலையில் இந்த விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் பார்க்கப்படுகிறது. 


சோமாலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலின் வான்வெளியை மொகடிஷு பகுதி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, சோமாலி சிவில் ஏவியேஷன் ஆணையம் (SCAA) நிர்வகிக்கிறது. இந்த விபத்து தவிர்ப்பு தொடர்பாக இதுவரை, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய இரண்டும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


மேலும் படிக்க | பிரபஞ்ச அழகிப் போட்டியில் இஸ்லாமிய நாட்டின் முதல் பங்கேற்பு! சரித்திரம் படைக்கும் அழகி ரூமி அல்கஹ்தானி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ