Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்ற பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரவணன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்குப்பதிவு
விபத்தில் பட்டாசு தயாரிப்பதற்கான 7 அறைகள் தரைமட்டமாக இடிந்த நிலையில் விஜயகுமார், ரமேஷ், காளிஸ்வரன், முத்து, ஆவுடையம்மாள் , லெட்சுமி உள்ளிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வருவாய் துறையினர் தீயணைப்புத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சரவணன், மேலாளர் போர்மேன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் மற்றும் ஆறுதல் குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (மே 9) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் படிக்க | சம்பள பாக்கியை வாங்கி தாங்க: காவல் நிலையத்தில் குவிந்த டெலிவரி ஊழியர்கள்
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் வெடி விபத்துகள்
முன்னதாக, இதே செங்கமலப்பட்டி அருகே கடந்த திங்கட்கிழமையும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. 2 நாள்கள் இடைவெளியில் தற்போது மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இது விருதுநகர் மாவட்டத்தின் டி. கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் மே 1ஆம் தேதி காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வகையில் விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி தொடர்ந்து இதுபோன்ற வெடிவிபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
பாமர தொழிலாளிகளின் உயிருக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, ஆபத்துடன் பணியாற்றும் சூழலே இந்த பகுதிகளில் நீடிக்கிறது. இதனை உடனடியாக தடுக்க துரிதமான மற்றும் காத்திரமான நடவடிக்கைகள் தேவை என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: மஞ்சள் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ