மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது. இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களும் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்பனை நாவலில் மட்டுமே படித்திருக்கக்கூடிய மாய நகரத்தை செளதி அரேபிய பட்டத்து இளவரசரும் ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் கட்ட திட்டமிட்டிருக்கிறார். இதன் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.  


மேலும் படிக்க | சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபரின் பயணம்: ஜோ பிடன் விடுத்த எச்சரிக்கை


NEOM நகரம் 170-கிமீ நீளத்தில் பூஜ்ஜிய கார்பன் நகரமாக இருக்கும்
வடமேற்கு சவூதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் திட்டம், இந்த ஆண்டு தொடக்கத்தில், மார்ச் மாதம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த நகரம் மனிதகுலத்தின் அடுத்த அத்தியாயமாகவும், பட்டத்து இளவரசரின் பாரம்பரியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது என்பது கற்பனையில் மட்டுமே முடியும் என்று நினைக்காதீர்கள், 2030ம் ஆண்டுக்குள் கட்டி முடிப்போம் என்று சவூதி அரேபிய அரசு உறுதியளிக்கிறது. 


மிரர் லைன்
LINE 200 மீட்டர் அகலமும், 170 கிலோமீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமும் இருக்கும் இந்த நகரத்தில் 9 மில்லியன் பேர் வசிக்கலாம். 34 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மாய நகரில் 20 நிமிடங்களுக்கு ஒரு அதிவேக இரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து நிமிட நடைப்பயணத்தில் LINE இல் உள்ள அனைத்து வசதிகளையும் அணுகலாம்.


யாபூ தீவு


TROJENA, NEOM இன் பிராந்தியப் பகுதியானது கேட்வே, டிஸ்கவர், வேலி, எக்ஸ்ப்ளோர், ரிலாக்ஸ் மற்றும் ஃபன் ஆகிய ஆறு மாவட்டங்களைக் கொண்டது. இது அகபா வளைகுடா கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் நமது இயற்கைப் பகுதியின் மையப்பகுதியில் 1,500 மீட்டர் முதல் 2,600 மீட்டர் வரை உயரம் மற்றும் கிட்டத்தட்ட 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.


மேலும் படிக்க | இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்


செங்குத்து விவசாயம்


இந்த 'கற்பனை நகரத்தில்' வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்கும் பணம் செலுத்த வேண்டும். கட்டிடங்கள் செங்குத்தாக இருப்பதால், பளபளப்பான, கண்ணாடியால் மூடப்பட்ட கட்டிடங்களில் செங்குத்து அமைப்பில் விவசாயம் நடைபெறும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.  


பளபளப்பான வெளிப்புற கண்ணாடி முகப்பு
'மிரர் லைன்' சவூதி அரேபியாவின் கடலோர பாலைவனம், மலை மற்றும் மேல் பள்ளத்தாக்கு நிலப்பகுதி வழியாக செல்லும். வெளிப்புற கண்ணாடி முகப்பானது, கட்டமைப்பை நிலப்பரப்பின் ஒரு தனித்துவமான பகுதியாக மாற்றும் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ