வெள்ளை மாளிகையின் நிரந்தர அதிபர் நான் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இன்னும் சில பல மணி நேரங்கள் மட்டுமே வீற்றிருப்பார். அதன்பிறகு நாற்காலியை விட்டு மட்டுமல்ல, வெள்ளை மாளிகையை விட்டும் வெளியேறுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே பெரிய தொழிலதிபராக ஆள் படையும், பணத்தின் வல்லமையும் கொண்டிருந்தாலும் அதிகார போதை, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதை அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்தது. அதன் எதிரொலி? இதுவரை அமெரிக்காவே பார்த்திருக்காத பல முன்னுதாரணங்களை ஏற்படுத்தியது. பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்வார்.  


அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) வெற்றி பெற்றார். அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று அடம் பிடித்த டிரம்ப் இறுதியில் வன்முறைகள், இரண்டாவது முறை கண்டன தீர்மானம் என பல பின்னடைவுப் பதிவுகளுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார்.


Also Read | டிரம்பிற்கு எதிராக கண்டன தீர்மானம்.. அடுத்தது என்ன..!!!


அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னதாக டிரம்ப் வெளியேறுவார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (Kamala Harris) பதவியேற்பார்..


தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்திற்குள் வரலாறு காணாத வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர் கட்டடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள்.  இந்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


வேறு வழியில்லாமல், அதிபர் டிரம்பின் உத்தரவின்றி அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் உறுதிபடுத்தியது டிரம்ப் அல்ல, மைக் பென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | Ivanka Trump-ன் வீட்டருகில் toilet-ஐ பயன்படுத்த 3000 டாலர் வாடகை


ஆனால், டிரம்ப்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன் வேறு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது என்று அமெரிக்காவே கவலையுடன் ஜோ பைடனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR