Turkey-Syria Earthquake: துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது; குளிர் காலநிலை மீட்புப் பணிகளைத் தடுக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 15,383 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 15,383 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது.


சிரியாவில்உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிரியா அகதிகளின் நிலைமை  நிலநடுக்கத்திற்கு பிறகு பரிதாபமானதாக மாறிவிட்டது.


நிலநடுக்கம் ஏற்பட்ட சிரியாவின் வடக்குப் பகுதிகளில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அகதிகளுக்கு மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துருக்கியில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை  அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா


மீட்புப்பணி


துருக்கியை உலுக்கிய பூகம்பங்களின் விளைவாக 12,391 பேர் வரை இறந்துள்ளனர் மற்றும் 62,914 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவில் இதுவரை 2,992 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டறிய 24 மணி நேரமும் அயராமல் உழைத்து வருகின்றனர்.


இடிபாடுகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டவர்கள்


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த வெப்பநிலையால் தாழ்வெப்பநிலை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பதால்,  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்ற கவலைகளும் அதிகரித்துள்ளன.


மேலும் படிக்க | Turkey Death Toll: கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! துருக்கி & சிரியாவில் மக்களின் நிலை திண்டாட்டம்


மேலும், இடிபாடுகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டவர்கள், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் உயிர்வாழும் விகிதம் 72 மணி நேரத்திற்குப் பிறகு வெகுவாகக் குறைகிறது என்பதால் சிக்கிக் கொண்டவர்கள் உயிர் பிழைபப்தற்கான வாய்ப்பு குறைந்துவிட்டதாக மீட்புப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர். 


துயரத்தில் சிக்கியிருக்கும் துருக்கி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.


இந்தியா 6 டன் அவசரகால நிவாரண உதவிகளை சிரியாவுக்கு அனுப்பியுள்ளது


இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 6 டன் அவசரகால நிவாரண உதவிகளை இந்தியா சிரியாவுக்கு அனுப்பியுள்ளது. கையடக்க ஈசிஜி இயந்திரங்கள், நோயாளி கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அவசரகால மருந்துகள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் மீட்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ