Turkey Earthquake: துருக்கி - சிரியா எல்லையில் பூகம்பம்! நிலநடுக்கத்திற்கு 500 பேர் பலி! அரசு தகவல்

Turkey Earthquake: துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 500 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. துருக்கி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. பல்வேறு கட்டங்கள் இடிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கலை பலி வாங்கிய இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட  இடிபாடுகளில் பலர்  சிக்கியுள்ளனர்.

1 /6

துருக்கி நேரப்படி, இன்று அதிகாலை 4.17 மணிக்கு  நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 17.9 கி.மீ., அளவில் இருந்தது 

2 /6

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் பாதிப்பு நிலவரம் இன்னும் தெரியவில்லை

3 /6

தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன

4 /6

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன

5 /6

பிப்ரவரி 6ம் நாள் துருக்கியின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நாளாக இருக்கக்கூடும்   

6 /6

துருக்கியில் ஏற்பட்ட நடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது

You May Like

Sponsored by Taboola