புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரிட்டனின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளால் போரிஸ் ஜான்சன் அரசு திகைத்துவிட்டது. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் உயர் தூதகரத்தின் செய்தித் தொடர்பாளர், இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்க மோடி அரசுக்கு தொழில்நுட்ப ஆதரவைத் தொடருவோம் என்று தற்போது கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கையால் பிரிட்டனின் மனநிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. இதன் கீழ் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னரும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது


இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை (Vaccine Certificate) பிரிட்டன் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோடி அரசு, பிரிட்டனில் இருந்து வருபவர்கள் இந்தியாவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.


ALSO READ: இங்கிலாந்து பயணிகளுக்கு நல்ல செய்தி: ‘Red List’-லிருந்து வெளி வந்தது இந்தியா


முன்னதாக, இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் (Vaccine) இருந்து பிரிட்டன் விலக்கியது. இந்த செயலுக்காக இங்கிலாந்து நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா எச்சரித்தது. இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்களைக் காரணம் காட்டி சான்றிதழ் தொடர்பான கேள்விகளை எழுப்பியது.


RTPCR பரிசோதனை ரிப்போர்ட் கட்டாயம்


பிரிட்டனுக்கு இந்தியா ஒரு கடுமையான செய்தியை அளித்துள்ளது. பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டிருந்தாலும், அவர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.


இது தவிர, இந்தியா வருவதற்கு சில விதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு, பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பான கொரோனா ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கை இருப்பது அவசியம்.


இங்கிலாந்து இந்திய பயணிகளை சிவப்பு பட்டியலில் சேர்த்தது


இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்காக ஏப்ரல் மாதத்தில், பிரிட்டன் (Britain) 'ரெட் லிஸ்ட்' கோவிட் -19 பயணத் தடையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடுகளின் கீழ், இந்தியாவில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கு வருவது தடைசெய்யப்பட்டது மற்றும் இந்தியாவில் இருந்து திரும்பும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடிமக்கள் பத்து நாட்கள் தனிமையில் விடுதிகளில் தங்குவது கட்டாயமாக இருந்தது.


இருப்பினும், பின்னர் இந்தியா கண்டிப்பு காட்டியபோது, ​​பிரிட்டன் தனது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்து, இந்தியாவை சிவப்பு பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலில் சேர்த்தது. இதன் கீழ், இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இப்போது தங்கள் வீட்டில் அல்லது விருப்பமான எந்த இடத்திலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க முடியும்.


ALSO READ: Vaccine Tours: அமெரிக்காவுக்கு தடுப்பூசி சுற்றுலா போவதன் பின்னணி தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR