இங்கிலாந்து பயணிகளுக்கு நல்ல செய்தி: ‘Red List’-லிருந்து வெளி வந்தது இந்தியா

இங்கிலாந்துக்கு பயணம் செய்யத் தயாராகும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் இங்கிலாந்து பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2021, 04:25 PM IST
இங்கிலாந்து பயணிகளுக்கு நல்ல செய்தி: ‘Red List’-லிருந்து வெளி வந்தது இந்தியா  title=

லண்டன்: இங்கிலாந்துக்கு பயணம் செய்யத் தயாராகும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் இங்கிலாந்து பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. பிரிட்டன் இந்தியாவை 'சிவப்பு' பட்டியலில் இருந்து நீக்கி 'ஆம்பர்' பட்டியலில் சேர்த்துள்ளது.

இதன் கீழ், இந்தியாவிலிருந்து, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் (Vaccine) செலுத்திக்கொண்டு வரும் பயணிகள் இனி 10 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் தங்க வேண்டியதில்லை.

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறியது

இங்கிலாந்தின்  (England) 'டிராஃபிக் லைட் சிஸ்டம்'-ன் கீழ், 'அம்பர்' பட்டியல் நாடுகளில் இருந்து வரும் மக்கள் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் பொருந்தும்.

பிரிட்டனின் போக்குவரத்து அமைச்சர் ட்விட்டரில், 'ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், இந்தியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ’சிவப்பு’ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 'ஆம்பர் 'பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 8 காலை 4 மணி முதல் அமலுக்கு வரும். எனினும், நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் வணிகங்களுடன் மீண்டும் இணைய விரும்பும் மக்களுக்கு பலவித வசதிகளையும் பொது இடங்களையும் திறப்பது நல்ல செய்தியாக இருக்கும். தடுப்பூசி செயல்முறை இதற்கான முக்கிய காரணமாகும்.’ என்று கூறியுள்ளார்.

ALSO READ: லண்டனில் கொட்டித்தீர்க்கும் மழை: வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இங்கிலாந்து செல்லும் முன்னர் இதை செய்ய வேண்டும்

இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி, 'அம்பர்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தங்கள் பயணத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனுடன், இங்கிலாந்துக்கு வருவதற்கு முன், அவர்கள் கோவிட் -19 இன் (COVID-19) இரண்டு டெஸ்ட்களுக்கான புக்கிங் செய்ய வேண்டும். அங்கு சென்ற பிறகு, 'பாசஞ்சர் லொக்கேட்டர் படிவத்தை' நிரப்ப வேண்டும். அதே நேரத்தில், பயணி 10 நாட்கள் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை

18 வயதிற்குட்பட்டவர்கள் அல்லது இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் ஆகியோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.

ALSO READ: UK: மக்கள் தொற்றால் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கிறது என ஆலோசகர் குற்றச்சாட்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News