மருத்துவர்கள் உள்பட அனைவரும் உணவை மெதுவாக சாப்பிட வேண்டும் என்றே பரிந்துரைக்கின்றனர். உணவை மெதுவாக சாப்பிட்டு உமிழ்நீருடன் சேர்த்து உட்கொண்டால்தான் அது எளிதாக ஜீரணமாகும் என கூறப்படுகிறது. ஆனால், இங்கு ஒருவருக்கு உணவை மெதுவாக சாப்பிட்டதால் சுமார் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்தில் உள்ள நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டோனால்ஸ் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் ஷபூர் மெஃப்தா என்பவர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுள்ளனர். அதுவரை எல்லாம் சரியாகதான் இருந்துள்ளது. 


மேலும் படிக்க | China: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீனா


அவர்கள் சாப்பிட்டு முடித்து பின்னர் பணம் கொடுக்க வந்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டோனால்ஸ் வாடிக்கையாளர்கள் கார் பார்க்கிங் செய்ய 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி அவர் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதால், 100 ஐரோப்பிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு வாடிக்கையாளர் ஷபூர் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார். 


இதுபோன்ற மிகவும் விலை உயர்ந்த மெக்டோனால்ஸை தான் எங்கும் பார்த்ததில்லை என அவர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"நாங்கள் உணவருந்தி வந்த மெக்டோனால்ஸின் எந்த இடத்திலும் 90 நிமிடங்கள் வரை மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. உணவை அவசரமாக சாப்பிட நாங்கள் விரும்பவில்லை. மேலும், சற்று அதிகமாக உணவை நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம்" என்றார். 


ஜனவரி 4 மற்றும் ஜனவரி 6, 2023 ஆகிய இரண்டு வெவ்வேறு நாட்களில் நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்கு அவர் இரண்டு முறை சென்றதால், பார்க்கிங் நிறுவனம் அவருக்கு சுமார் 10,000 ரூபாய்க்கான இரண்டு நிலையான அபராத அறிவிப்புகளை வழங்கியது.


மேலும் படிக்க | அமெரிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கள்! ஜோ பைடன் கவலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ