இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸை பெற்ற நாட்டின் மிக உயர்ந்த நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கொரோனா தொற்று அறிகுறி பெற்றிருந்ததாகவும், 10 டவுனிங் தெருவில் தனிமைப்படுத்தப் படுவதாகவும் பிபிசி தெரிவித்தது. இந்நிலையில் தற்போது பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக கடந்த புதன் அன்று, இங்கிலாந்து அரசகுடும்ப இளவரசர் சார்லஸ் COVID-19 க்கு நேர்மறை சோதனை முடிவு பெற்றார். எனினும் அவர் லேசான அறிகுறிகளையும் நல்ல ஆரோக்கியத்தையும் காண்பிப்பதாகக் கூறப்படுகிறது.



இந்த வாரம் இங்கிலாந்து முழுஅடைப்பு கட்டத்திற்குள் நுழைந்தது, அனைத்து குடிமக்களும் முற்றிலும் தேவைப்படாவிட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டது, உணவுக்காக ஷாப்பிங் செய்வதையும், வெளிப்புற உடற்பயிற்சியையும் தவிர்த்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


எனினும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மெதுவாக இருப்பதற்காக ஜான்சன் விமர்சனங்களை எதிர்கொண்டார், சில முக்கிய நபர்கள் விரைவான எதிர்வினை பரவலைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.


உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றால் நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 578 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது நாட்டின் பிரதமருக்கு வைரஸ் தொற்றோ இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.