அமெரிக்க அதிபர் தேர்தல்களின் முடிவுகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல்கள் எப்போதுமே உலக மக்களால் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலின் மூலம் குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது இரண்டாவது பதவிக்காலத்தை நாடுகிறார். அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஜோ பிடன் துவக்கத்திலிருந்தே அவருக்கு சரியான போட்டியை அளித்து வந்துள்ளார்.


COVID-19 தொற்று காரணமாக, முன்னெப்போதும் இல்லாத விதமாக நடந்த ஆரம்பகால வாக்களிப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் ஏற்கனவே போடப்பட்டு விட்டன.


அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 நிலவரம்:


அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் முன்னணியில் உள்ளார். வட கரோலினா உட்பட தேர்தலை தீர்மானிக்க உதவும் பிற இடங்களில் இன்னும் முன்னிலை தெளிவாகவில்லை.


அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடென் (Joe Biden) ஆகியோருக்கு இடையிலான அமெரிக்க அதிபருக்கான போட்டியில், நாடு 160 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது 67 சதவீத வாக்குகளாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை அளவாகும்.


நம் இந்திய நேரப்படி காலை 8:30 மணியளவில், அயோவா, மொன்டானா, நெவாடா மற்றும் உட்டா ஆகிய 4 மாநிலங்களுக்கு வாக்களிப்பு நிறைவடைந்து விட்டது.


ஜோ பிடன் 126 தேர்தல் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் 89 வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதிபர் பதவியைக் கைப்பற்ற ஒரு வேட்பாளர் 270 தேர்தல் வாக்குகளைப் (Electoral Votes) பெற வேண்டும்.


முன்னதாக, டொனால்ட் டிரம்ப் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங் மற்றும் நெப்ராஸ்காவை ஆகிய இடங்களில் முன்னனியில் இருந்தார்.


ALSO READ: டிரம்புக்கு வாக்களிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாகாண ஆளுநர் யார் தெரியுமா?


இதற்கிடையில், ட்விட்டர் இன்க் மற்றும் பேஸ்புக் இன்க் ஆகியவை சமீபத்தில் உருவாக்கப்பட்ட பல வலதுசாரி செய்தி அகௌண்டுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தன. தங்கள் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மீறியதற்காக இந்த அகௌண்டுகள் இடைநிறுத்தப்பட்டதாக ட்விட்டர் கூறியது. நம்பத்தகாத நடத்தைக்காக பேஸ்புக் அவற்றை இடைநீக்கம் செய்ததாக் ஆறிவித்தது என ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.


அமெரிக்க (America) ஊடக அறிக்கையின்படி, பிடன் 117 இடங்களிலும் டிரம்ப் 80 இடங்களிலும் முன்னிலையில் இருப்பார்கள் என முன்னரே கணக்கிடப்பட்டது. இது சி.என்.என், ஃபாக்ஸ் நியூஸ், எம்.எஸ்.என்.பி.சி / என்.பி.சி நியூஸ், ஏபிசி, சிபிஎஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.


அமெரிக்க அதிபர் தேர்தல் (American Presidential Elections) 2020-ல் குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் ஜோ பிடனுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மொத்த மாநிலங்களில், டெக்சஸ், பென்சில்வேனியா, ஃப்ளோரிடா, ஜார்ஜியா உள்ளிட்ட சுமார் 12 மாநிலங்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. இவற்றின் சாய்வு அதிபரை நிர்ணயிக்கும் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   


ALSO READ: US Elections: வன்முறை வெடிக்கும் அச்சத்தில் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR