உலகிலேயே US-ல் தான் COVID-19 பரிசோதனை அதிகம் நடத்தபடுகிறது: டிரம்ப்
உலகிலேயே மிகப்பெரிய COVID-19 சோதனைத் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்!!
உலகிலேயே மிகப்பெரிய COVID-19 சோதனைத் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்!!
ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளை விட உலகிலேயே மிகப்பெரிய COVID-19 சோதனைத் திட்டத்தை அமெரிக்கா கொண்டுள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார். மேலும், உலகில் இந்த நோய் காரணமாக அமெரிக்கா "மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை" கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
"எங்கள் நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் உள்ளது" என்று டிரம்ப் ஒரு வெள்ளை மாளிகை வட்டமேசை மாநாட்டில் கூறினார். COVID-19 க்கு இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் சோதனை செய்துள்ளனர். மேலும் 1,37,000-க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர், இவை இரண்டும் அனைத்து நாடுகளை விட மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
"நாங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாக பரிசோதனை செய்கிறோம். மற்ற நாடுகளில் பாதிக்கபட்ட ஒருவர் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு செல்லும் போது தான் அவர்களை பரிசோதனை செய்கின்றனர். எனவே தான் அவர்களுக்கு பாதிப்புகள் குறைவாக உள்ளது. நாங்களும் அவ்வாறு சோதனை செய்தால், எங்களிடமும் அதே அளவு பாதிப்புகள் தான் காட்டும். நாங்கள் அனைவரையும் சோதனை செய்வதால் தான் எங்களுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே, இது இரட்டை முனைகள் கொண்ட வாள், ”என்றார்.
அதே நேரத்தில், மற்ற நாடுகளை ஒப்பிடும் பொது அமெரிக்காவில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் உள்ளது என்று டிரம்ப் மேலும் கூறினார். "நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறோம், நாங்கள் தடுப்பூசிகளை மிகச் சிறப்பாக பரிசோதனை செய்து வருகிறோம். அத்துடன், நாங்கள் சிகிச்சை முறையில் மிகச் சிறப்பாக செயல்பாடு வருகிறோம். சில நல்ல தகவல்கள் விரைவில் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன், "என்று அவர் மேலும், கூறினார்.
READ | உண்மையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி; இந்தியர் அல்ல: நேபாள PM ஒலி!
"உலகில் எங்கும் இல்லாத மிகப் பெரிய சோதனைத் திட்டம் எங்களிடம் உள்ளது. நீங்கள் சீனா அல்லது ரஷ்யா அல்லது பெரிய நாடுகளில் ஏதேனும் ஒன்றை சோதித்திருந்தால், உதாரணமாக, நீங்கள் இந்தியாவை சோதித்திருந்தால், நாங்கள் சோதிக்கும் முறையில் நீங்கள் சோதனை செய்தால் நீங்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும் எண்களைக் காண்பீர்கள். பிரேசில் ஒரு பெரிய சிக்கலைச் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் நம்மைப் போல சோதனை செய்வதில்லை, ”என்று டிரம்ப் கூறினார்.
"எனவே நாங்கள் சரியான சோதனையைச் செய்கிறோம், சோதனையைச் செய்வதன் மூலம், எங்களுக்கு ஏராளமான வழக்குகள் உள்ளன. உதாரணமாக, இதுவரை நாங்கள் 45 மில்லியன் சோதனைகளை செய்துள்ளோம். நீங்கள் அந்த எண்ணில் பாதி செய்திருந்தால், உங்களுக்கு பாதி வழக்குகள் இருக்கலாம். அதில் இன்னொரு பாதியை நாங்கள் செய்திருந்தால், உங்களிமுடம் பாதி பாதிப்புகள் இருக்கும். 'ஓ, நாங்கள் பாதிப்புக்களை சிறப்பாக பதிவு செய்கிறோம் என மற்ற நாடுகள் கூறுவார்கள். மேலும், சீனா உலகுக்கு செய்ததை மறந்துவிடக் கூடாது" என்று அவர் கூறினார்.