World Bizarre News: எப்போதும் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும்போது ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தமாக கூறுவார்கள். "எதிலும் கவனமா இருக்க வேண்டும். கவனக்குறைவு மிகுந்த பிரச்னை ஏற்படுத்தும்" என்பதுதான். நம் அனைவருக்கும் இதில் கண்டிப்பாக பிரச்னை இருந்திருக்கும், இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு வேலையை செய்யும் போதோ அல்லது ஒரு சின்ன விஷயத்தை மேற்கொள்ளும்போதோ மிகுந்த கவனத்துடனும், பொறுப்பனுடனும் செயல்பட வேண்டும் என்பதை பலரும் அவர்களின் அனுபவங்களின் வாயிலாகவும், பலரின் அனுபவங்களின் மூலம் தெரிந்திருப்பார்கள். இருப்பினும், ஒரு சின்ன கவனப்பிசகு ஒரு பெரிய பிரச்னைக்கு இட்டுச்செல்லும் போது ஏற்படும் வலியை சொல்லி மாளாது. 


தாயின் கவனச்சிதறல்?


அந்த வகையில், அமெரிக்காவில் ஒரு தாய் தனது கவனச்சிதறலால் தன் 1 மாத கைக்குழந்தையை பறிகொடுத்ததாக கூறப்படும் சம்பவம் கேட்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அமெரிக்காவின் மிசௌரியில் தனது ஒரு மாத பெண் குழந்தையை தூங்க வைக்க தொட்டிலில் போடுவதற்கு பதிலாக சமையல் செய்ய பயன்படும் ஓவனில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது கவனச்சிதறலால் ஏற்பட்டதா அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கிறது போன்ற விவரங்கள் உறுதிப்படுத்தபடவில்லை. 


மேலும் படிக்க | ஹங்கேரி அதிபர் ராஜினாமா... மக்களின் எதிர்ப்பால் பதவி விலகல் - காரணம் என்ன?


அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த குழந்தையின் தாயான மரியா தாமஸ் அமெரிக்காவின் மிசௌரி மாகாணம் கன்சாஸ் சிட்டியில் வசிப்பவர். தற்போது குழந்தைகள் நல வாரியம் மரியா தாமஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த சம்பவம் கடந்த வார தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


போலீசார் தரப்பு


குறிப்பாக, இதுகுறித்து வெளியான முதற்கட்ட தகவல்களின்படி, மரியா தாமஸ் தனது குழந்தையை தூங்கவைப்பதற்கு தொட்டிலில்  வைப்பதற்கு பதில் ஓவனில் வைத்ததாக கூறப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அந்த குழந்தையின் உடைகள் கருப்பாகியிருந்தது, டையப்பரும் எரிந்திருந்தது. வீடு முழுவதும் புகை நாற்றம் அடித்தது" என்றனர். மரியா தாமஸ் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் வாக்குமூலம் ஏதும் அளிக்கவில்லை. 


தாத்தாவின் வாக்குமூலம்


அந்த பெண் குழந்தையின் தாத்தா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு மரியா தாமஸ் தனது குழந்தை குறித்து பேசியதாகவும், அப்போது உடனே வீட்டுக்குச் சென்றபோது, முழுவதும் புகை நாற்றம் அடித்தது, குழந்தை தொட்டிலில் கிடந்தது. 


இவை நீதிமன்றம் மூலம் தெரியவந்தது. மேலும், மரியா தாமஸ் தன்னிடம் தான் குழந்தையை தூங்க வைக்க தொட்டிலில் ஈடுபவதற்கு பதில், தவறுதலாக ஓவனில் வைத்துவிட்டதாக கூறினார் என குழந்தையின் தாத்தா அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தண்டனை உண்டா?


மரியா தாமஸ் தற்போது ஜாக்சன் கவுண்டி தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். மிசௌரியில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்பட்சத்தில் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றமாகும். 


மேலும் படிக்க | உடலுறவு... ஊரில் யாருக்கும் தூக்கமே இல்லை... இரவில் வரும் பயங்கர சத்தம் - என்ன காரணம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ