2-வது குவாட் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், மிகக் குறுகிய காலத்தில் குவாட் உலகில் முக்கியமான பங்களிப்பை செய்து வருவதாகவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்தார். ஜனநாயக முறையே சிறந்தது என்பதையே  இந்த வெற்றி உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளதாகவும், சீனா மற்றும் ரஷ்யாவின் எதேச்சாதிகார போக்கு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | உக்ரைனுக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு



மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் ஒப்பிடக்கூடிய அளவில் இருந்தாலும், கொரோனாவை கையாள்வதில் இந்தியா சிறப்புடன் செயல்பட்டதாக  ஜோ பைடன் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், மற்ற நாடுகளுக்கு இந்தியா வழங்கிய தடுப்பூசிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாராட்டினார்.


ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டினார், மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சமீபத்தில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு வழங்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.   


மேலும் படிக்க | உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, QUAD நாடுகள் கூறுவது என்ன!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR